பிரபல நடிகை தாய்- தந்தைக்கு கொரோனா உறுதி.. கவலையில் ஆழ்ந்த ஹீரோயின்..

by Chandru, Oct 27, 2020, 15:36 PM IST

நடிகை சார்மி ஏராளமான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமூக ஊடகங்களில் தனது பெற்றோர்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.சார்மி கூறியதாவது: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனது பெற்றோர் மார்ச் மாதத்திலிருந்து தங்கள் ஹைதராபாத் வீட்டில் கடுமையான ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். தங்களை அதிக பட்சமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஹைதராபாத் வெள்ளம் மற்றும் மாசு காரணமாக என் அப்பாவின் துரதிர்ஷ்டவசமாக் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். அதை அறிந்து மனம் உடைந்தேன் . அம்மாவும் அப்பாவும் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர் நாகேஸ்வர் ரெட்டி. நான் பல ஆண்டுகளாக அவரை அறிந்திருக்கிறேன், நான் அவரை கண்மூடித்தனமாக நம்புகிறேன். அவரது அற்புதமான மருத்துவர்கள் குழு எனது பெற்றோரை மிகவும் நல்ல முறையில் கவனித்து வருகின்றனர் . மேலும் எனது பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு நன்றாகப் பலன் அளித்து வருகின்றது. மருத்துவமனையில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் நான் மிகவும் நன்றி தெரிவிக்கிறேன் ” எனத் தெரிவித்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை