சிம்புவுக்கு உருக்கமான கடிதம் எழுதிய ஒடிசா பெண்..

by Chandru, Oct 27, 2020, 15:12 PM IST

சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படமான 'ஈஸ்வரன்' படப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க முக்கிய வேடத்தில் பாரதி ராஜா நடிக்கிறார்.சிம்புவுக்கு ஒடிசாவைச் சேர்ந்த அங்கிதா என்ற பெண் ஒரு உணர்ச்சி பூர்வமான கடிதம் எழுதியுள்ளார், அது வைரலாகியுள்ளது.

முன்னதாக தனது உடல் நிலை பற்றி முதலில் பதிவிட்டிருந்தார் அப்பெண், நான் கடந்த 3 நாட்களாகத் தொண்டை எரிச்சல், தலைவலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கை நிச்சயமற்றது, அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அது கடவுள் கையில் உள்ளது” எனப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் அங்கிதா தனது கைப்பட எழுதிய கடிதத்தில்“சிம்பு நீங்கள் மீண்டும் சமூக ஊடகங்களுக்குத் திரும்பினீர்கள், அது பெரிய சந்தோஷம். ஈஸ்வரன் பட மோஷன் போஸ்டர் மயக்கும் விதமாக இருந்தது. அதைபார்த்து பேச்சில்லாமல் நின்றேன். என் வாழ்க்கையில் நீங்கள் மட்டுமே உத்வேகம். உங்கள் வார்த்தைகள், பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் எனக்குத் தைரியம், நம்பிக்கை, அன்பு, உந்துதல் அளித்ததற்கு நன்றி. நீங்கள் கிரேட்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சிம்புவின் நண்பர் நடிகர் மகத் ராகவேந்திரா, அனிதாவுக்குத் தெரிவித்த பதிலில் மாஸ் ஹீரோ சிம்புவிடம், நான் கடிதத்தைப் படித்தபோது அவர் அதைக்கேட்டு கண்ணீர் சிந்தினார் என்று அப்பெண்ணுக்கு பதில் அளித்திருக்கிறார். இந்த பதில் அப்பெண்ணை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை