லாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..

லாட்வியா நாட்டுப் புகழ் பெற்ற ராப் பாடகர் ஒருவர் பாரதியார் பாடலுடன் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் 'ரணகளம்' பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த 'தாதா 87' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்ததன் மூலம் உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை அவர் பெற்றார். தாதா 87 வெற்றிப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி தான் தற்போது 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' (PUBG) படத்தையும் இயக்குகிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

பப்ஜி படத்திற்கு இசை அமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே தாதா 87 படத்தில் இவரது இசையில் 'ஆறடி ஆண்டவன்' பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.தற்போது PUBG படத்திற்காக விஜய் ஸ்ரீ ஜி-யின் வரிகளுக்கு இசையமைத்துள்ளார். முண்டாசு கவி பாரதியாரின் 'நான் வீழ்வேன் என நினைத் தாயோ' வரிகளுடன் பாடலைத் துவக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.இப்பாடலை, பிரபல ராப் இசைக் கலைஞர் ஃபைவ் ஓ (Five O) பாடியிருக்கிறார். இவர் லாட்வியா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய ஆல்பங்கள் Aizejot, CitadaksReps, Nothing Compares, Nesteijties, Vis Man Ir Arlauts மிகவும் பிரபலமானவை. சர்வதேச புகழ் பெற்ற ஃபைவ் ஓ, பப்ஜி படத்தின் 'நான் வீழ்வேன் என நினைத் தாயோ' பாடலின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இதில் புரட்சி செல்வி ஐஸ்வர்யா தத்தா, நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன், அனித்ரா நாயர் , ஆராத்யா, சான்ரியா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கின்றனர். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை இசை வெளியீட்டில் தனி ட்ரெண்ட்டை ஏற்டுத்திவரும் "டிரெண்ட் நிறுவனம்" வெளியிடுகிறது. பாடல்கள், லாட்வியாவில் உள்ள ஜெனிஸ் ஸ்ட்ராம் ஸ்டூடியோஸ் (Janis Straume Studios) மற்றும் சிங்கப்பூரில் உள்ள அர்டாண்ட் ஸ்டீடியோஸில் (Ardant Studios) பதிவு செய்யப்படவுள்ளன. தீபாவளியன்று பாடல்கள் வெளியாகிறது. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் இசை சரவெடி தீபாவளி தினத்தில் ஆரம்பமாகிறது. படம், உலகமெங்கும் பொங்கலன்று வெளியாகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds