ஹரியானாவின் பல்லப்கரில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியில் காதல் என்ற பெயரில் 21 வயதே ஆன மாணவியை லவ் ஜிஹாத் என்ற பெயரில் சுட்டுக்கொன்றான் ஒரு கயவன். இது அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பி.காம் இறுதி ஆண்டைத் தொடரும் மாணபி நிகிதா தோமர் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்தார்.
அப்போது காரில் வந்த 2 பேர் அவரை வழி மறித்து காரில் ஏறும்படி வற்புறுத்தினர். அவர் மறுக்கவே வலுக்காட்டாயமாக ஏற முயன்றனர். நிகிதா சத்தம் போட்டார். உடனே அவர்கள் துப்பாக்கியால் நிகிதாவை சுட்டுவிட்டு காரில் ஏறித் தப்பினர். இதில் நிகிதா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நிகிதாவை இஸ்லாமிற்கு மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபர் மிரட்டி வந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஹரியானாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த கொலைபற்றி அறிந்து நடிகை கங்கனா ரனாவத் கோபமடைந்தார். லவ் ஜிஹாத் செய்திருக்கும் அந்த கயனை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுங்கள் என்று ஆவேசம் காட்டி இருக்கிறார். அவர் கூறும்போது,”பிரான்சில் நடந்த சம்பவத்தைக் கண்டு முழு உலகமும் அதிர்ச்சி அடைந்தது, இப்போதும் இந்த ஜிஹாதிகளுக்கு எந்த வெட்கமோ அல்லது சட்ட பயமோ இல்லை. ஒரு இந்து பெண்ணை, மாணவியைத் தனது கல்லூரிக்கு வெளியே பட்ட பகலில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஏனெனில் அவர் இஸ்லாமிற்கு மாற மறுத்து விட்டார். உடனடி நடவடிக்கைகள் தேவை. அந்த கயவனை என் கவுன்ட்டரில் சுட்டுத்தள்ளுங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கங்கனா ரனாவத் சமீகாலமாக இதுபோன்ற சர்ச்சைகளைக் கையாண்டு வருகிறார். பிரான்ஸ் சம்பாம் பற்றி அவரும் அவரது தங்கையும் சமூக வலைத் தளத்தில் சொன்ன கருத்தையடுத்து அவர்கள் இருவர் மீதும் மத உணர்வை தூண்டியதாக வழக்கு பதிய கோர்ட் உத்தர விட்டது. அதன்பேரில் அவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்தப்படுகிறது என்றும் நட்சத்திர பார்ட்டிகளில் இலவசமாகப் போதை மருந்து தரப்படுகிறது என்றும் கூறினார். பின்னர் மகாராஷ்டிரா ஆளும் அரசு சிவசேனா பற்றித் தாக்கி பேசியதுடன், மும்பை பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் போல் இருப்பதாகக் கூறி சர்ச்சை எழுப்பினார்.
இதற்கிடையில் கங்கனாவின் சர்ச்சை பேச்சுகளுக்குப் பதிலடி தரும் வகையில் அனுமதி இல்லாமல் அலுவலகம் கட்டி இருப்பதாக மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. மேலும் போதை மருந்து பயன்படுத்தியாக அவரே சொன்ன வீடியோவை ஆதாரமாகக் கொண்டு அவரிடம் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கங்கனா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார்.