ரகசிய காதலனுடன் நடிகை நீச்சல் குளத்தில் உல்லாசம்.. கதகதப்பான அரவணையில் காதல் மயக்கம்..

by Chandru, Oct 29, 2020, 10:49 AM IST

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று சொல்வார்களே அதுபோல் இருப்பவர் அந்த நடிகை. பார்த்தால் அப்பாவியான நடிகை ஆனால் அவர் பிடித்திருப்பதோ 6 அடிக்கும் உயரமான காதலன். இத்தனை வருடமாகச் சத்தமில்லாமல் அரங்கேற்றிக் கொண்டிருந்த காதலனுடனான விளையாட்டை தேங்காய் உடைத்தது போல் இம்முறை எவ்வளவு நெருக்கம் காட்ட முடியுமோ அவ்வளவு நெருக்கம் காட்டி, எவ்வளவு ஆடை துறக்க முடியுமோ அவ்வளவு துறந்து இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு காதலனுக்காக உருகி உருகி கவிதையே எழுதியிருக்கிறார்.

யார் அந்த தேவதை என்றுதானே கேட்கிறீர்கள். சேவல் படம் மூலம் அறிமுகமான பூனம் பஜ்வா தான் அந்த நடிகை. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் அவரது அப்ராணி போன்ற தோற்றம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். உடல் வெயிட்போட்டு குண்டாக இருந்தவர் அதைப் பல வருடங்கள் கழித்தே உணர்ந்து தற்போது உடலை ஸ்லிம் தோற்றத்துக்கு மாற்றிச் சிக்கென இருக்கிறார். பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கொரோனா காலம் வந்தாலும் வந்தது நடிகர், நடிகைகளுக்குக் கல்யாண சீசனும் தொடங்கி விட்டது. காஜல் அகர்வால் திருமணம் இம்மாதம் நடக்கிறது. ஏற்கனவே ராணா, நடிகை மியா ஜார்ஜ் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் திருமணம் செய்துக்கொண்டனர்.

பூனம் பஜ்வாவுக்கும் அதுதான் நிலைமை திருமணம் செய்துகொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்தவே அவரும் அதற்கான முடிவை செய்திருக்கிறார். அதன் எதிரொலியாகத் தான் தனது காதலன் சுனில் ரெட்டி படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். காதலனுக்குப் பிறந்த தினம் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லி கவிதையே எழுதி இருக்கிறார்.

அந்த கவிதை இதோ! என் வேர் நீ, நான் விளையாடும் மைதானம் நீ, என் சிறகு நீ! என் அழகன், என் அழகான ஆத்மா, என் குற்றத்தில் என் பங்குதாரர், என் வாழ்க்கைத் துணை, விளையாட்டுத் துணை, ஆத்ம துணை, என் இணை எல்லா கனவுகள், என் படைப்பாளி ..உன்னுடனான எல்லா தருணங்களும் பிரமாண்டமானவை, மந்திரமானவை !! நான் உனக்காக படைக்கப்பட்டேன். எல்லா மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியம், உற்சாகமான அன்பு, வேடிக்கை என எல்லாமே இந்த தருணத்திலிருந்து பயணிக்கத் தொடங்கி விட்டது, இனி என்றென்றும் நீதான்! ஐ லவ் யூ என்று சொல்லும் வார்த்தைகளை விட என் காதல் அதிகம் !! அதை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

அதைவிட அதிகமாக நான் உன்னை நேசிக்கிறேன்!இவ்வாறு ரகசிய காதலனை அறிமுகப்படுத்தி அவர் மீது காதலையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். அந்த காதலை வார்த்தைகளால் மட்டுமல்ல குறைந்த ஆடையுடன் சுனிலுடன் கதகதப்பான அரவணைப்புடன் கட்டிப்பிடித்து நீச்சல் குளத்தில் உல்லாசமாக நீந்தி வெளிப்படுத்தி அந்த படத்தையும் வெளியிட்டு இளவட்டங்களைச் சூடேற்றியிருக்கிறார். சீக்கிரமே பூனம் பஜவா, சுனிலுக்கு டும் டும் சத்தம் கேட்குமாம்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை