காஜல் அகர்வால் திருமண விழா தொடங்கியது.. மெஹந்தியில் அலங்காரம்..

by Chandru, Oct 29, 2020, 18:44 PM IST

நடிகை காஜல் அகர்வால் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் என ஷூட்டிங்கிற்காக மாநிலம் விட்டு மாநிலம் என விமானத்தில் மாறி மாறி பறந்துகொண்டிருந்தார். அவரது திருமணம் பற்றி குடும்பத்தினர் வாய் திறந்தால் இதோ சொல்கிறேன் என்று வெளியூர் அல்லது வெளிநாடு ஷூட்டிங் பறந்துவிடுவார் மீண்டும் ஒரு ரவுண்டு சுற்றி விட்டு 3 அல்லது 6 மாதம் கழித்துத் திரும்புவார். திருமண பேச்சை எடுத்தால் கடுப்படிப்பார். இப்படியே கல்யாணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டு கோடிகளைக் கல்லா கட்டிக் கொண்டிருந்தார்.

ஜாலியாக சினிமா வாழ்க்கை சென்ற நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இரவு ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்தபோது திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியானார்கள். கண்ணெதிரே நடந்த இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்து அவர் மீளவே பல நாட்கள் ஆனது. இந்த விபத்து நடந்த போது அங்கிருந்தவர்களை போலீசார் விசாரித்தனர். பயத்திலிருந்து விடுபடாமலிருந்த காஜலிடம் விசாரிக்கவில்லை என்று தெரிகிறது.

மீண்டும் இந்தியன் 2 ஹூட்டிங் தொடங்கினால் அதில் பங்கேற்பது பற்றி காஜல் யோசித்து வந்தார். அவருக்குச் சாதகமாக கொரோனா ஊரடங்கு வந்தது. ஷூட்டிங்கும் 5 மாதத்துக்கும் மேல் தொடங்கவில்லை. படப்பிடிப்பு சாக்குப்போக்கு சொல்லி குடும்பத்தினரிடமும் தப்பிக்க முடியவில்லை. ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே இருந்தவரிடம் திருமணம் பற்றிப் பேச அவரும் தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவுடனான தனது காதல் பற்றி விரிவாகப் பகிர்ந்துக் கொள்ளத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 30ம் தேதி மும்பையில் திருமணம், நடக்கிறது. முதலில் மண்டபத்தில் திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டு பிறகு வீட்டிலேயே நடத்த முடிவானது.

திருமண கொண்டாட்டமும் வீட்டுக்குள்ளேயே தொடங்கி விட்டது. 3 நாட்கள் நடக்கும் விழாவில் மெஹந்தி வைத்து அலங்கரிக்கும் விழா தொடங்கியது அடுத்து சங்கீத் மற்றும் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. மெஹந்தி வைத்துக்கொண்டு அழகான பதுமை போல் காட்சி தரும் புகைப்படத்தை காஜல் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.காஜல் நடிக்க வேண்டிய இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதில் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் சிக்கல் நீடிக்கிறது. அது முடிந்து தொடங்குவதற்குள் காஜல் தனது தேனிலவு பயணத்தை முடித்திவிட்டு வந்துவிடுவார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை