எதிர்ப்பு கிளம்பிய படப்பிடிப்புக்கு வரும் நடிகைக்கு பாதுகாப்பு.. ஸ்டுடியோவிலேயே 1 மாதம் தங்க ஏற்பாடு..

by Chandru, Oct 30, 2020, 12:48 PM IST

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியா பட் அஜய் தேவ்கன் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது.அதில் காட்டு பகுதியில் ஆக்ரோஷத்துடன் ஈட்டியை எரியும் காட்சியும் பின்னர் முஸ்லிம் தோற்றத்தில் கண்ணுக்கு மையிட்டு தலையில் குல்லா அணிந்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட ஸ்டில்லும் வெளியானது. டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ராம் சரண் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த தலைவர்களும், பழங்குடித் தலைவர்களும் அடங்கிய குழு, ஜூனியர் என்.டி.ஆர் முஸ்லீம் தொப்பி அணிந்த காட்சிகளை ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து நீக்கக் கோரி எதிர்ப்புக் குரல் எழுப்பி உள்ளனர். இப்போது, ​பாஜகவைச் சேர்ந்த ஆதிலாபாத் எம்.பி. சோயம் பாபுராவ் கூறுகையில், ராஜமவுலி எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை என்றால் படம் திரையிட அனுமதிக்கமாட்டேன் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான ஆர்.ஆர். ஆரின் சமீபத்திய டீஸரில், என்.டி.ஆர் நடித்த கோமரம் பீமின் காட்சிகளில், இஸ்லாமியர்களின் தொப்பி அணிந்து, கண்களுக்குச் சூர்மாவைப் பயன்படுத்தி இருக்கின்றனர். பீம் ஒரு முஸ்லீம் தொப்பி அணிந்திருப்பதால் இந்த ஆதிவாசிகள் அனைவரும் ஆழ்ந்த வேதனை அடைந்ததாக சோயம் பாபு ராவ் கூறினார்.கோமரம் பீம் முஸ்லீம் மன்னர்களுக்கு எதிராகப் போராடியதால், அவர் எந்த காரணத்திற்காகவும் முஸ்லீம் தொப்பி அணிந்தவராகச் சித்தரிக்கப்படக் கூடாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

ஆர்.ஆர்.ஆர் என்பது தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கோம ராம் பீம் மற்றும் அல்லூரி சீதா ராமராஜு ஆகிய இரு சுதந்திர வீரர்களிடையேயான நட்பின் கற்பனைக் கதை. என்.டி.ஆர் கோமரம் பீம் வேடத்திலும், ராம் சரண் அல்லூரி சீதா ராம ராஜு வேடத்திலும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் பாலிவுட் இளம் நடிகை அலியா பட் நடிக்கிறார். ஏற்கனவே இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சர்ச்சையில் அலியாபட் சிக்கினார். அவருக்கு எதிராக ரசிகர்கள் கடும் கண்டனம் தெவித்தனர். அவர் நடித்த இந்தி படமொன்று ஓடிடி தளத்தில் வெளியானபோது அதற்கு டிஸ்லைக்கை கோடிக்கணக்கில் தெரிவித்து உலக அளவில் அதை ட்ரெண்டாக்கினார்கள்.

மேலும் அவர் தற்போது நடிக்கும் ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் படப் பிடிப்புக்கு வரும் அலியா பட்டுக்குச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படக் குழு செய்திருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படப் பிடிப்பு நடக்கிறது. ஸ்டியோவிற்குள்ளேயே ஒரு மாதம் தங்கி இருந்து அலியாபட் நடிக்கிறார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செக்யூரிட்டியும் செய்யப்பட்டிருக்கிறது.சுஷாந்த் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதே அலியா பட்டை ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து நீக்கும்படி ரசிகர்கள் வலியுறுத்தினர் ஆனால் அதை ராஜமவுலி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading எதிர்ப்பு கிளம்பிய படப்பிடிப்புக்கு வரும் நடிகைக்கு பாதுகாப்பு.. ஸ்டுடியோவிலேயே 1 மாதம் தங்க ஏற்பாடு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை