பிரபல வாரிசு நடிகர் மகன் மீண்டும் வர ஒரு வாய்ப்பு.. அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்தவர்..

by Chandru, Oct 30, 2020, 12:43 PM IST

பிரபல நடிகர் கார்த்திக் 80கள் தொடங்கி 90 களையும் தாண்டி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக். எதிர்ப்பார்ப்புடன் வந்தார். ஒரு சில படங்களில் நடித்தவர் திடீரென்று இருட்டறையில் முரட்டு குத்து அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். அதன்பிறகு நடித்த சில படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இனி அடல்ட் படம் பக்கம் தலைவைப்பதில்லை என்ற முடிவுடன் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு மீண்டு வர வந்திருக்கிறது. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் எல் எல் பி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தற்போது "தயாரிப்பு எண் 2" என பெயரிடபட்டிருக்கிறது.

ஏற்கனவே இந்நிறுவனம் தயாரிக்கும் பிளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தை இயக்கி வருகிறார் பத்ரி வெங்கடேஷ். அப்படம் முடிந்திருக்கிறது. தங்கள் தயாரிப்பில் ஒரு இயக்குநரின் படம் வெளியாகும் முன்னரே, அவரை புதிய படத்திற்கும் ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்வது, தமிழ் சினிமாவில் அரிதாக நிகழும் சம்பவம். அது பத்ரி வெங்கடேஷ் விஷயத்தில் நடந்திருக்கிறது. புதிய படம் பற்றி தயாரிப்பாளர்கள் எல்.சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் கூறும்போது, எங்கள் மனதை கவர்ந்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் உடன் மேலும் ஒரு புதிய படத்தில் இணைவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அவருடைய இயக்கத்தில் நாங்கள் தயாரித்த முதல் படம், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவான "பிளான் பண்ணி பண்ணனும்" எங்களுக்கு மிகப்பெரும் திருப்தியை தந்துள்ளது.

"பிளான் பண்ணி பண்ணனும்" படத்தின் இறுதி வடிவம் ஒரு தயாரிப்பாளாரக எங்கள் எதிர்பார்ப்பை பலமடங்கு பூர்த்தி செய்து, பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உலகளாவிய வகையில் அனைத்து ரசிகர்களையும் இப்படம் கண்டிப்பாக கவரும்.ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் தன்மை கொண்ட, மற்றுமொரு அட்டகாசமான திரைக்கதையுடன் அவர் எங்களை அனுகியபோது, உடனடியாக அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டோம். எந்த வகையான கதாப்பாத்திரத்திலும் கலக்கும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படம் இதுவரை அவர் திரைவாழ்வில் செய்திராத, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரத்தில் அவரை காட்டும் படமாக இருக்கும் என்றனர்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறும்போது, தயாரிப்பாளர்கள் இருவரும் எனது புதிய திரைக்கதையால் கவரப்பட்டார்கள். இந்த கடினமான சூழல் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் கடும் பிரச்சனைகளை தந்து வருகிறது என்பதால் படத்தின் பட்ஜெட்டை மாற்றியமைக்கும் எண்ணத்தில் இருந்தேன், ஆனால் இருவருமே அதை மறுத்து, திரைக்கதை கேட்பதை அப்படியே எடுப்போம். இறுதி வடிவமே முக்கியம் என்றார்கள். இளமை நாயகனாகவும் திறமை வாய்ந்த நடிகராகவும் கலக்கி வரும் கௌதம் கார்த்திக்குடன் இப்படத்தில் இணைந்த்திருப்பது பெரும் மகிழ்ச்சி. தற்போதைய நிலையில் "தயாரிப்பு எண் 2" என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. 2021 மார்ச் மாதம் படத்தின் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் நடிகர்கள் குழு பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக மிக விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு இயக்குனர் கூறினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை