ஐசியுவில் இருக்கும் பிரபல நடிகர் உடல்நிலை ? நடிகை மனைவி பரபரப்பு தகவல்..

by Chandru, Oct 30, 2020, 12:38 PM IST

பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பில் சிக்கி மீள்வது அடிக்கடி நடக்கிறது. அமிதாப் உள்பட தமன்னா வரை பல நட்சத்திரங்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டனர். சமீபத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா இருவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில் ராஜசேகர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் பரவியது.

ஆனால் அதை மறுத்த ஜீவிதா, எங்களுக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். அதன்பிறகு வதந்திகள் குறைந்தது. ஆனால் ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பிறகு தெரிய வந்தது. ராஜசேகருக்கு கொரோனா தொற்று குணமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. அதில் அவர் தேறி வருகிறார்.

இதுகுறித்து சிட்டி நியூரோ சென்டர் மருத்துவனை டாக்டர் வெளியிட்ட அறிக்கையில், ராஜசேகருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் வெண்டி லேட்டரில் இல்லை. அவருக்கு அளிக்கும் சிகிச்சை நல்ல பலன் கொடுத்திருக்கிறது என ராஜசேகருக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் ரத்ன கிஷோர் கூறி உள்ளார்.கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவருக்காகப் பிரார்த்தனை செய்யும்படி ஜீவிதா கேட்டிருக்கிறார். என் கணவர் ராஜசேகர் விரைந்து குணம் அடைய நலவிரும்பினாள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். ராஜசேகருக்காக பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கு அவரது மகள்கள் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜீவிதா இன்று ராஜசேகர் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது.என் கணவர் ராஜசேகர் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,. 70 சதவீதம் அவர் குணமாகி இருக்கிறார். தொற்று குறைந்து வருகிறது. ஐசியு வார்டிலிருந்து ஒரு சில தினங்களில் அவர் சாதாரண வார்டுக்கு அழைத்து வரப்பட உள்ளார் என்றார். ராஜசேகர் விரைவில் பூரண குணம் அடைய ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர் ராஜசேகர் தமிழில் இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். ஜீவிதாவும் தமிழில் தப்புக்கணக்கு, தர்ம பத்தினி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களது மகள் ஷிவானி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை