ஹன்ஷிகா 50வது படத்தில் நடித்த 2 பிரபல நடிகர்கள்..

by Chandru, Oct 30, 2020, 13:10 PM IST

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும்போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. அதே சமயம் சுருட்டு பிடித்தபடி ஹன்சிகா கொடுத்த போஸுக்கு எதிர்ப்பும் கிளம்பிப் படத்தைப் பரபரப்பாக்கியது.சமீபத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்துப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்ததில், படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.

இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது:இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்திலிருந்து, நம்மைத் தற்காத்துக் கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தி, தவிக்க விட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். மடிந்து போன ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டிக்கொள்கிறேன். இன்னொரு புறம் கொரோனா முன்கள பணியாளர்கள் கடும் உழைப்பை தந்து, இந்த கொடிய காலத்தில் நம்மைப் பாதுகாத்திருக்கிறார்கள்.

அவர்கள் இல்லாமல் இந்த கொடிய காலத்தை அமைதியான வழியில் நாம் கடந்து வந்திருக்க இயலாது. கடும் மன உறுதியுடன், மனிதம் காக்கப் போராடிய அந்த வீரர் கள் அனைவரையும் இந்த தருணத்தில் வணங்குகிறேன். “மஹா” திரைப்படம் முழுமையாகப் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பல தடைகளைத் தாண்டி நீடித்த, இந்த படப்பிடிப்பில், பங்கு கொண்ட படக்குழுவினர் அனைவரும் பெரும் அர்ப் பணிப்புடன் பணியாற்றினார் கள். அரசின் அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுதாக கடைப்பிடித்தே படப்பிடிப்பை நடத்தினோம். ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் ஈட்டுப்பாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய இயக்குநர் யூ.ஆர். ஜமீலுக்கு நன்றி.

இயக்குநர் ஜமீல் மீது பெரும் நம்பிக்கை வைத்து இப்படத்தை முழுதாக தாங்கிய தூண்களான தயாரிப்பாளர்கள் மதியழகன், தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் அனைவருக்கும் பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடைக் காலத்தில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம். இப்படத்தில் ஒரு பாத்திரமாகப் பங்கு கொள்ள ஒப்புக்கொண்ட சிம்புவிற்கு பெரும் நன்றி படத்தில் அவரின் பகுதிகளை ரசிகர்கள் கண்டிப்பாகப் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.

இயக்குநர் ஜமீல் இயக்கும் இப்படத்தினை எட்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் (Etcetera Entertainment) சார்பில் மதியழகன் மற்றும் ஸ்ட்ரீம்ஸ் புரொடக்‌ஷன், மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் (Streams Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் தயாரிக்கிறார்கள். நடிகர் STR சிம்பு மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஶ்ரீகாந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.மஹா படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஜே.லக்‌ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.ஆர். ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்கிறார், மணிமொழியன் ராம துரை கலை அமைத்திருக்கிறார். கார்கி படல்கள் எழுதி உள்ளார். காயத்திரி ரகுராம், ஷெரிஃப் நடனம் அமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை