முருங்கை கீரையில் துவையல் செய்வது எப்படி?? இயற்கை மருத்துவம்..

by Logeswari, Oct 30, 2020, 14:08 PM IST

முருங்கை மரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் கீரை மற்றும் காய் போன்றவற்றில் இருந்து உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கிறது. கீரையில் இருக்கும் சாறு நம் வயிற்றை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல் மலசிக்கலிருந்து விடுபட உதவுகிறது. இவ்வளவு நன்மை மிகுந்த முருங்கை கீரையில் துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
துளிர் முருங்கைக் கீரை - 1 கப்
உ. பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
புளி - சிறிதளவு
வெங்காயம்- 1
உப்பு- தேவையான அளவு
பூண்டு- 4 பல்
கடுகு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 ஸ்பூன்.

செய்முறை:-
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு ஆகியவை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.

பின்னர் இந்த கலவையை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை தனியாக ஒரு பௌலில் மாற்றி கொள்ளவும். இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..

You'r reading முருங்கை கீரையில் துவையல் செய்வது எப்படி?? இயற்கை மருத்துவம்.. Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை