நிலாவை கையில் பிடித்த நடிகை.. உனக்கும் வேண்டுமென்றால் நீ அதை செய்..

by Chandru, Nov 1, 2020, 10:29 AM IST

அதை செய்ய மாட்டேன் இதை செய்ய மாட்டேன். சோம் பேறித்தனமாக இருக்கு இன்றைக்கு உடற்பயிற்சி வேண்டம் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன் என்ற பேச்சுக்கே சில நடிகைகளிடம் இடமில்லை. வெளியூரில் இருந்தாலும் சரி, உள்ளூரில் இருந்தாலும் சரி, படப்பிடிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜிம்மிற்குள் உடற் பயிற்சியை செய்து உடற் கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்கள். அப்படியொரு பேர்விழிதான் ராஷ்மிகா மந்தன்னா. கன்னட நடிகையான ராஷ்மிகா டியர் காம்ரேட், கீதாகோவிந்தம் போன்ற தெலுங்கு படத்தில் நடித்து பெரிய ஹிட் படங்களை அளித்ததுடன் சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் சரிலேறு நீக்கெவ்று படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதையடுத்து சுல்தான் படம் மூலம் கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார்.

தனது நடிப்பால் மற்ற மொழிப்பட இயக்குனர்கள், ஹீரோக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராஷ்மிகா. அத்துடன் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். ராஷ்மிகாவுக்கு உடற்பயிற்சி என்பது தினமும் கண்டிப்பான ஒரு அம்சமாக வைத்திருக்கிறார். பல டாப் ஹீரோயின்கள் மத்தியில் புதுமுகமாக அறிமுகமாகி தெலுங்கில் தனக்கென் ஒரு இடத்தை பிடித்திருக்கும் ராஷ்மிகா அதற்கு தனது திறமையை முழுமையாக நம்புகிறார். ஜிம்மில் ஹீரோக்கள் தூக்கும் வெயிட் லிஃட் தூக்கி அசத்தும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். கறுப்பு நிற டிஷர்ட், அதே நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்து குத்தவச்சி அமர்ந்து அந்த எடையை அப்படியே தூக்கி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். பிறகு வெளியிட்ட மெசேஜில் சாக்குபோக்கு சொல்வதெல்லாம் எனக்கு பிடிக்காது. நீ நினைப்பது உனக்கு வேண்டுமென்றால் கண்டிப்பாக இதை செய்தே ஆக வேண்டும் என ரசிகர்களுக்கு அட்வைஸை சற்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார்.

ராஷ்மிகாவுக்கு முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதனால் தன்னை எதற்க்கும் ஃபிட்டாக வைத்துக்கொள்ள கடுமையான பயிற்சி செய்கிறார். முதல் மரியாதை படத்தில் அந்த நிலாவைதான் நா கையில புடிச்சேன் என்ற பாடல் வரும், அதுபோல் ராஷ்மிகாவுக்கு நிலாவை கையில் பிடிக்க ஆசை வந்தது. இரவில் மொட்டை மாடிக்கு சென்றவர் விரல்களை கேமரா போல் காட்டி அதில் நிலாவை ஃபோக்கஸ் செய்து அதற்குக்குள் பார்வையை செலுத்தி தன் கைக்குள் நிலாவை அடக்கி வைத்து ஆசையை நிறைவேற்றினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை