நிவேதா வாய்ப்பை கைப்பற்றிய பிரபல நடிகை..

by Chandru, Nov 1, 2020, 10:39 AM IST

ஒரு நாள் கூத்து படத்தில் நடித்தவர் நிவேத பெதுராஜ். அடுத்து பொதுவாக என் மனசு தங்கம், மெண்டல் மனதில். டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் எதிர்ப்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பினார். புரேவரேவருரா படத்தில் ஸ்ரீவிஷ்ணு ஜோடியாக நடித்தவர் அடுத்து அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுந்தபுரமுலு படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அப்படம் பெரிய ஹிட்டாக அமைந்தது. இப்படத்தில் முதல் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அவர் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். நிவேதா பெதுராஜ் எஸ் டி டி 14 என்ற தெலுங்கு படத்தில் சாய் தரம் தேஜ் நடிக்கும் அரசியல் பின்னணி கதையில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. கொரோனா தளர்வில் ஊரடங்கு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நிவேதாவின் கால்ஷீட் வேறு படத்துக்கு கொடுத்திருந்ததால் எஸ்டிடி 14 படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. உடனடியாக படப்பிடிப்பு தொடங்க படக்குழு வேகம் காட்டிய நிலையில் நிவேதாவுக்கு பதில் வேறு ஹீரோயினை தேடினார்கள். அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்றது. அவர் உடனடியாக அவர் வாய்ப்பை ஏற்றுக்கொண்டதுடன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் பூமிகா என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்த வந்த துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், இது வேதாளம் சொல்லும் கதை போன்ற படங்களின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஐஸ்வர்யா தனக்கென ஒரு இடத்தை பிடித்தாலும் விஜய், அஜீத் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வரவில்லை.

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அதுவும் அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பு பல நடிகைகள் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தனர். அதற்கு காரணம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தால் தொடர்ந்து ஹீரோயின் அந்தஸ்த்தில் இருக்கலாம் தங்கை வேடம் என்றால் ஹீரோயின் அந்தஸ்த்து போய்விடும் மீண்டும் ஒரு படத்தில் சிவகார்த்த்கேயனுடன் ஜோடியாக நடிக்க முடியாது என்பதை மனதில் வைத்து நடிக்க மறுத்தனர். ஆனால் அதையெல்லாம் பார்க்காமல் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை வேடத்தை ஏற்று நடித்தார். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் எது வந்தாலும் அதை ஐஸ்வர்யா ஏற்பதால் தொடர்ந்து வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை