சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய கோடிக்காணவர்களை பாதித்து கோடி பேரை பலி வாங்கி இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலகினரை அமிதாப்பச்சன் முதல் பட்டியலிட்டால் அது நீண்டுக் கொண்டே செல்கிறது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட போதும் அதன் தாக்கத்தால் பழுதடைந்த நுரையீரல் பாதிப்பால் பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தந்து இன்னுரை இழந்தார். இந்நிலையில், பிரபல கன்னட பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தினேஷ் காந்திக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். முன்னதாக தினேஷுக்கு மாரடைப்பு எற்பட்டவுடனே அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 52. தினேஷ் காந்தியின் திடீர் மறைவு கன்னட சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சில மாதங்களுக்கு முன் மாரடைப்பில் மரணமடைந்தார். அடுத்து காமெடி நடிகர் புல்லட் பிரகாஷ், மூத்த நடிகர் ராக்லைன் சுதாகர், கன்னட பட இயக்குனர் விஜய் ரெட்டி, இசை அமைப்பாளர் ரஞ்சன் ஆகியோர் அடுத்தடுத்து சமீபத்தில் உயிரிழந்து இருந்தனர். இந்த தொடர் மரணம் பலரையும் பயத்தில் ஆழ்த்தி உள்ளது. தினேஷ் காந்தி மறைவுக்கு ரசிகர்கள் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தினேஷ் காந்தி ஒரு சில ஹிட் படங்களை தயாரித்துள்ளார். சுதீப், ராகிணி திவேதி நடித்த வீர மடகாரி படத்தை இவர் தயாரித்தார். இது ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டான விக்ரமார்குடு படத்தின் ரீமேக். இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டானது.
ரவிச்சந்திரன், மீரா ஜாஸ்மின், நமீதா, பிரகாஷ் ராஜ் நடித்த ஹூ என்ற படத்தையும் தயாரித்தார். தமிழில், விக்ரமன் இயக்கத்தில் உருவான பிரியமான தோழி படத்தின் ரீமேக். பானுப்ரியா நடித்த சத்ரபதி உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். தினேஷ் காந்தி அடுத்து குழந்தைகள் படம் ஒன்றை இயக்க இருந்தார். அதில் தனது மகனை நடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருந்தார். கொரோனா காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அவரது ஆசை நிறாசையாகி விட்டது. உலகம் முழுவதுமே ஒரு கோடியை தாண்டி பலியாகி வருவதால் கலிகாலம் பிறந்துவிட்டதோ என சில ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து திகிலூட்டுகின்றனர்.