பிரபல நடிகர்கள் அவ்வப்போது உதவிகள் செய்கின்றனர். பேரிடர் காலங்களில் அரசுக்கு நன்கொடைகளும் அளிக்கின்றனர். அவர்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கிலும் பல நடிகர்கள் உதவிகள் அளித்தனர். அரசுக்கும் முதல்வர், பிரதமர் நிவாரண நிதிகள் அளித்தனர். ஆனால் எல்லா உதவிகளையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு நடிகர் புயலாக எழுந்து கொரோனா காலத்தில் உதவிகள் வழங்கத் தொடங்கினார். அந்த உதவி இன்னமும் தொடர்கிறது. அந்த நடிகர் வேறுயாருமல்ல சோனு சூட்.
தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் நடித்தார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.விபத்தில் இரண்டு கால் மூட்டுகளும் சேதமானதால், கிட்டத்தட்ட 6 மாதங்கள் படுக்கையில் கிடந்தார் 22 வயதான ப்ரக்யா என்ற மாணவி. அவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின், வாக்கர் உதவியோடு சில அடிகள் எடுத்து வைக்க வைத்தார். அந்தச் சிகிச்சைக்கு உதவியவர் நடிகர் சோனு சூட். இதில் நெகிழ்ந்த மாணவி எனக்குக் கடவுள் சோனு சூட் என்றார்.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கினர்.தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு ஆங்காங்கே அவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அப்படிச் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி சிலரைத் தனி விமானம் மூலமாகவும் சோனு சூட் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.வறுமையில் இருக்கும் விவசாயிக்கு ட்ராக்டர், ஸ்பெய்னில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி செய்து தந்தார். இதுபோல் அவர் செய்த உதவிகள் பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகிறது.
தற்போது வட நாட்டில் மிர்சாபூர் பகுதி கிராமத்தில் உள்ள பிள்ளைகள் 5ம் வகுப்புக்கு மேல் படிப்பை நிறுத்தி வந்தனர். அதற்கு காரணம். 6ம் வகுப்புக்குச் செல்ல வேண்டுமென்றால் பல கிலோமீட்டர்கள் சுற்றிச் எல்லா வேண்டும் அல்லது காட்டுப்பகுதிகளில் செல்ல வேண்டும் மிருகங்கள் மற்றும் பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும் என்பதால் படிப்புக்கு முழுக்கு போட்டனர். இந்த விஷயம் சோனு சூட்டுக்கு தெரியவந்தது உடனடியாக கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் சைக்கிள் வாங்கு கொடுத்துவிட்டார். தற்போது அந்த கிராமத்துப் பிள்ளைகள் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதையறிந்த நெட்டிஸன்கள் சோனு சூட் போல் யாராவது உண்டா என்று அவருக்குப் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.