மருத்துவமனையில் இருந்து சின்ன சிருவுடன் வீடு திரும்பிய மேக்னாராஜ்..

by Logeswari, Nov 2, 2020, 12:54 PM IST

பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட மேக்னா தனது குழந்தையுடன் நேற்று வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முக்கிய கதாநாயகியாக நடித்துள்ளார் மேக்னா ராஜ். இவர் 2018 ஆம் ஆண்டு கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவை பல ஆண்டுகாளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கொரோனா ஊரடங்கில் இருந்த பொழுது திடீரென சீரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் உயிர் இழந்தார். அப்பொழுது மேக்னா 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். கணவனை இழந்து மிகவும் வருத்ததில் இருந்த மேக்னாவிற்கு அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைப்பது போல் கோலாகலமாக சிமந்தத்தை நடத்தினார்கள்.

இதையடுத்து மேக்னா அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். இதனால் குடும்பத்தினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் சீரஞ்சீவி தான் மறு பிறவி எடுத்துள்ளதாக கூறி வருகின்றனர். இதனால் மேக்னாவிற்கு வாழ்த்துக்களும் குவிந்து வந்தன. குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகை நஸ்ரியா மற்றும் அவரது கணவர் ஆகிய இரண்டு பேரும் சின்ன சிருவை காண மருத்துவமனைக்கு சென்று மேக்னாவுக்கு வாழ்த்தை தெரிவித்தனர்.

குழந்தையை அவரது குடும்பத்தினர்கள் சிண்டு என்று செல்ல பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். மேக்னா அவர்களின் குழந்தையின் பெயர் சூட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மருத்துவமனையில் இருந்த மேக்னா மற்றும் குழந்தை நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

You'r reading மருத்துவமனையில் இருந்து சின்ன சிருவுடன் வீடு திரும்பிய மேக்னாராஜ்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை