மல்டி ஸ்டார் படம் இயக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 கதி என்ன?

by Chandru, Nov 2, 2020, 12:49 PM IST

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஒரு வழியாக ஷூட்டிங் தொடங்கியது. அவ்வப் போது இடை வெளிவிட்டு படப்பிடிப்பு நடந்தது. திடீரென்று சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாக செலவு செய்வதாக இயக்குனர் மீது புகார் சொன்ன பட நிறுவனம் படப்பிடிப்பை நிறுத்தியது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சமரசம் ஏற்பட்டு ஷூட்டிங் தொடங்கியது.

சில மாதங்களுக்கு முன் இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டது, இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாக அனைத்து படப்பிடிப்புகளும் அடுத்த 5 மாதம் நிறுத்தப்பட்டது.

தற்போது அரசு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கிய நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது குறித்துத் தயாரிப்பு தரப்பிலிருந்து அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்று தெரிகிறது.படப்பிடிப்பைத் தொடங்க ஷங்கர் காத்திருக்கிறார். ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் இல்லாததால் ஷங்கர் அப்செட்டில் இருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்திற்கு எச்சரிக்கை கடிதம் எழுதினார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்காவிட்டால் வேறு படத்தை இயக்கவிருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்கும் படி லைகா நிறுவனம் ஷங்கரிடம் கேட்கிறது. அதற்கு ஷங்கர் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து மீண்டும் பட நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்தியன்2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் ஷங்கர் அடுத்த படத்துக்குப் போவேன் என்று எச்சரித்த நிலையில் தற்போது அடுத்த படமாக மல்டி ஸ்டார் படம் இயக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

விஜய் சேதுபதி, கே ஜி எப் சேப்டர் ஒன் படத்தில் நடித்த யஷ் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை மிகப் பிரமாண்டமாக ஷங்கர் இயக்க உள்ளார். அதற்காக நடிகர்களிடம் பேசி வருகிறாராம். அது முடிவானதும் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார்.இந்தியன் 2 பட நாயகன் கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டார். இந்தியன் 2 படத்தின் முக்கிய இருவர் கமல்ஹாசன், ஷங்கர் இருவரும் அடுத்த படங்களில் கவனத்தைத் திருப்பி இருப்பதால் இந்தியன் 2 படத்தின் கதி என்னவாகும் என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை