பெருப்பாலான நடிகைகள் இணைய தளத்தில் ஆக்டிவாக இருக்கின்றனர். பலர் தங்களது கவர்ச்சி படங்களையும் பலர் தங்களது ஒர்க் அவுட் படங்களையும் வெளியிடுகின்றனர்.
பல நடிகைகளை நெட்டிஸன்கள் ஆபாசமாகத் திட்டி பதிவிடுகின்றனர். அதற்குச் சம்பந்தப்பட்ட நடிகைகள் பதிலடி தருகின்றனர். சில நடிகைகள் விமர்சனத்துக்குப் பயந்து வலைத் தள பக்கத்திலிருந்து வெளியேறி விடுகின்றனர்.நடிகை ராஷ்மிகா மந்தன்னாவை சில நெட்டிஸன்கள் தரக்குறைவாக விமர்சித்தும் அவரது தோற்றத்தைக் கிண்டல் செய்தும் மெசேஜ் வெளியிட்டனர். அதற்கு ராஷ்மிகா நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில் கூறியதாவது: ஒரு திரையின் தொடுதலிலிருந்து எல்லாவற்றையும் பார்க்கக் கூடிய மற்றும் எல்லாமும் கிடைக்கக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் இந்த இணைய தள வசதியால் ஒரு நபரைக் காப்பாற்றலாம் அல்லது ஒரு நபரைக் கொல்லக்கூடும். இதனால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் உடல் தோற்ற ரீதியாகக் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். நான் சைபர் கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறேன்,
ஆனால் நான் ஏன் இன்னும் இணையத்திலிருந்து வெளியேறவில்லை. ஏனென்றால் இந்த எதிர்மறையைக் கவனிப்பதை விட இணையத்தில் நல்லதை எப்படிப் பார்ப்பது என்று எனக்குத் தெரியும் .ஆனால் விஷயம் என்னவென்றால், நீங்கள் மிகவும் எதிர் மறையைப் அதிகமாகப் பார்க்கும் போது அதை நம்பத் தொடங்குகிறீர்கள்.
அதனால் உங்கள் எண்ணத்தில் எதிர் மறை மட்டுமே உள்ளது. இணையத்தில் அதுவொரு சிறிய பகுதிதான் அதைவிட நிறை நல்ல விஷயங்கள் அதில் இருக்கிறது. டிஜிட்டல் நல்வாழ்வில் கவனம் செலுத்துவதற்கும், பெரிய மற்றும் சிறந்த விஷயங்களுக்கு செல்போனை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். இது யாரையும் இணைப்பதற்கும் ஒத்துழைப்பதற்கும் ஆகும். இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.
ராஷ்மிகா தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் கீதாகோவிந்தம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.