ரஜினி வீட்டில் மலைபோல் குவியும் தபால் கார்ட்.. அரசியலுக்கு வா தலைவா என ரசிகர்கள் அழைப்பு..

by Chandru, Nov 3, 2020, 13:18 PM IST

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசியல்வாதிகள் மேடைக்கு மேடை பேசினார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக் கேட்டு ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுபரபரப்பானது. ஒரு கட்டத்தில் நெருக்கடி முற்றியதும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் முன்னிலையில் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்கி எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்றதுடன் விரல்களில் பாபா பாணியிலான அரசியல் முத்திரை, கொடி போன்றவற்றையும் அறிமுகபடுத்தினார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவதற்கான பணிகளை கவனித்து வந்தார். ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார். தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. புதுகட்சியை தீபாவளிக்கு அறிவிப்பார். பொங்கலுக்கு அறிவிப்பார், பிறந்த நாளில் அறிவிப்பார் என்று தகவல்கள் மட்டுமே பரப்பப்பட்டு வந்தன. ஆனால் வருடங்கள் ஓடியதுதான் மிச்சம் கட்சி தொடங்கவில்லை. 2021ம் ஆண்டு தமிழ்நாடு தேர்தல் நெருங்கி வந்துக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் கட்சி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ரஜினியின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில், அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலிலிருந்து விலகி நிற்பதுபோல் அறிவிப்பு வெளியிட்டர்.

ரஜினி வெளிட்ட அறிக்கையில்,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவி தீவிரமாக பரவிக் கொண்டு இருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறி உள்ளார். இது அரசியலிருந்து அவர் ஒதுங்குவது போல் தோன்றவே ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு திரண்டு அவரை அரசியலுக்கு வர்ச் சொல்லி கோஷமிட்டனர். தற்போது ரஜினி வீட் டிற்கு அவரது ரசிகர்கள் போஸ்ட் கார்டில் ரஜினியை அரசியலுக்கு வரும்படி கேட்டு போஸ்ட் கார்ட் அனுப்பி வருகின்றனர். அந்த அஞ்சல் அட்டைகள் அவரது வீட்டில் குவிந்து வருகிறது.

மக்கள் மனதில் மன்னனாக வாழ்கிறாய் இது தங்களுக்கு கிடைத்த அரிய வரம்
தாங்கள் அரசியலில் ஈடுபட்டால் மக்களுக்கு மாற்றம் வரும், மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தை கொண்டுவர உங்களை ஆண்டவன் அனுப்பி இருக்கான் வா தலைவா வா உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்படி பலரும் பல வித கருத்துக்கள் தெரிவித்துக்கின்றனர். இந்த கடிதங்கள் ரஜினியின் மனதில் மாற்றம் ஏற்படுத்துமா என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை