வாய் கசப்பு.. பித்தம்.. போன்றவையை நீக்கும் புதினா துவையல் ரெசிபி..

Advertisement

ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் வாயில் கசப்பு தன்மை ஏற்படும். இதனால் இனிப்பான உணவை சாப்பிட்டாலும் கசப்பு சுவை இனிப்பை மறைத்து விடும். அப்படிப்பட்ட சூழலில் வாய் கசப்பை நீக்கும் தன்மை புதினாவுக்கு மட்டுமே உள்ளது. இட்லி, தோசைக்கு ஏற்ற பல வித சட்னியை புதினாவில் தயாரிக்கலாம்.அதலில் ஒன்றான புதினா துவையலை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
சுத்தம் செய்த, ஆய்ந்த புதினா - 1 கட்டு
தேங்காய் துருவல்- 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 5
உ.பருப்பு- 50 கிராம்
க. பருப்பு- 2 ஸ்பூன்
புளி- சிறிதளவு
எண்ணெய்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு.

செய்முறை:-
புதினாவை ஆய்ந்த பிறகு தண்ணீரில் நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும். அடுப்பை பத்த வைத்து பிறகு அதில் வாணலியை வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் புதினா இலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவைகளை வதக்கவும். பின்னர் புளி, தேங்காய் துருவல், உப்பு ஆகியவை சேர்த்து பொன்னிறமாக வறுத்த கொள்ள வேண்டும்.ஒரு பக்கம் உளுத்தம் பருப்பையும் வறுத்து கொள்ளவும்.

இரண்டையும் சேர்த்து மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு துவையல் பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை வாணலியில் சேர்த்து ஒரு 10 நிமிடம் சூடு ஏற்றி கிளறி விடவும்.பத்தே நிமிடத்தில் சுவையான புதினா துவையல் தயார். இது சாப்பிடுவது மூலமாக உடலில் புத்துணர்ச்சி ஏற்படும்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>