பிரியாணி சாப்பிட்டு வளர்த்த உடம்பு இப்படித்தானிருக்கும்.. ஹீரோ பற்றி கமென்ட்டோ கமென்ட்..

by Chandru, Nov 3, 2020, 14:08 PM IST

திரையுலகில் 3 நடிகர்கள் பிரியாணிக்கு பிரபலமானவர்கள். அவர்களில் இருவர் விஜய் அஜீத், மற்றொருவர் ஆர்யா. விஜய் தனது மன்ற மாநாடுக்கு வரும் ரசிகர்கல் அல்லது பத்திரிகையாளர் சந்திப்பு, முக்கிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் அனைவருக்கும் பிரியாணி விருந்தளிப்பார். திடீரென்று அவரே பிரியாணி தட்டை தூக்கி சென்று பரிமாறுவார். அதேபோல் அஜீத். படப்பிடிப்பு நேரத்தில் அஜீத்தே பிரியாணி தயார் செய்து சமைப்பார். அதை யூனிட்டில் உள்ள அத்தனை பேருக்கும் அளிப்பார். இன்னொருவர் இருக்கிறார் அவர் ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு ஸ்பெஷல் பிரியாணி அளிப்பார்.நயன்தாரா தொடங்கி தமன்னா வரை அவர் வீட்டு பிரியாணியை சாப்பிடாதவர்கள் கிடையாது. எந்த ஹீரோயினுக்கு பிரியாணி விருந்து தருகிறாரோ அந்த நடிகையுடன் அவருக்கு காதல் கிசு கிசு வந்து விடும் அதை அவர் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

அவரும் பல நடிகைகளுக்கு காதல் வலை வீசிப்பார்த்தார் கழுவற மீனில் நழுவற மீனாக அவருடன் நெருக்கம் காட்டிய நடிகைகள் நழுவிய வண்ணம் மிருந்தனர். ஆனாலும், ஆர்யாவின் முயற்சி தோற்றுப்போக வில்லை. நடிகை சாயிஷா ஷெய்களிடம் ஒர்க் அவுட் ஆனது. அவருக்கு பிரியாணியுடன் காதலையும் சேர்த்துக் கொடுத்தவுடன் அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இத்தனை வருடம் அம்மா செய்து தந்த பிரியாணியை சாப்பிட்டு வந்த ஆர்யா தற்போது மனைவி சாயிஷா செய்யும் பிரியாணியை ருசித்து சாப்பிடுகிறார். இதனை வருடம் சாப்பிட்ட பிரியாணி அவருக்கு புதிய படத்தில் நடிப்பதற்காக உதவி இருக்கிறது. ரஜினி நடித்த காலா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் சல்பேட்டா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா குத்துச் சண்டை வீரராக நடிக்கிறர். அதற்காக கட்டு மஸ்தாக வெயிட் போட வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக் கொண்டதால் கடுமையான பயிற்சிக்கு பிறகு அந்த தோற்றத்துக்கு மாறினார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்று நெட்டில் வைரலாகி வருகிறது. குத்துச் சண்டை வீரராக நடிக்கும் ஆர்யாவுக்கு குத்துச் சண்டை காட்சியில் நடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார் பா.ரஞ்சித். அதன்படி ஆர்யாவும் ரஞ்சித்துடன் மோதுவது போல் போஸ் தந்தார். ஆர்யாவின் கட்டுமஸ்தான தோற்றத்தை கண்ட ரசிகர்கள் பிரியாணி சாப்பிட்டு வளர்த்த உடம்பு இப்படித்தான் இருக்கும் என மெஜேச் பகிர்ந்து வருகின்றனர், சல்பேட்டா படம் 80 கால கட்டங்களுக்கு முன்பு நடந்த பீரியட் படமாக உருவாகிறது. சல்பேட்டா பரம்பரை பற்றிய கதையாக இது அமைக்கப்படுகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை