பிரபல நடிகரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. அவரே வெளியிட்டு அதிர்ச்சி தந்தார்..

by Chandru, Nov 3, 2020, 17:56 PM IST

நடிகைகள் தனுஸ்ரீ தத்தா முதல் பாயல் கோஷ் வரை பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி பகிரங்கமாகத் தெரிவித்தனர். நானா படேகர், அனுராக் மீது குற்றச்சாட்டு சுமத்தினார்கள். இதில் நானா படேகர் வழக்கு ஆதாரமில்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது. அனுராக் காஷ்யப் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகள் ஐரா கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியிட்டார். தன்னுடைய 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் முதல் மனைவி ரீனா. இவருக்கு பிறந்தவர் ஐரா கான். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:நான் சிறியவளாக இருக்கும் போதே என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். சுமூகமான முறையில் விவாகரத்து நடந்ததால் நான் அதிர்ச்சி அடையவில்லை. விவாகரத்து பெற்று பிரிந்தாலும் இன்னும் நண்பர்களாகவே உள்ளனர். ஆனால் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. எனக்கு 14 வயதாக இருந்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். குறிப்பிட்ட நபர் என்ன செய்கிறார். அதைத் தெரிந்து செய்கிறாரா தெரியமல் செய்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது. விஷயம் தெரிந்து என்னை என் பெற்றோர் மீட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் அதிர்ச்சி அடையாமல் மனத் தைரியத்துடன் இருந்தேன். அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை. யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை. நானே அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எனது உணர்வுகளால் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எந்தவொரு பிரச்சனையும் அதிக நீண்ட நாட்கள் சிந்திக்கும் அளவு பெரியது அல்ல.

இவ்வாறு ஐரா கூறி உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை