இரண்டாம் குத்து படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு.. விளக்கம் கேட்ட நோட்டீஸால் பரபரப்பு..

by Chandru, Nov 3, 2020, 18:39 PM IST

இருட்டறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் அதன் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்குகிறார். இதில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டதுடன் டீஸரும் வெளியிட்டார். அதிலிருந்த ஆபாச காட்சிகள். ஆபாச வசனங்கள் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

திரைப்பட இயக்குனர் பாரதி ராஜா இரண்டாம் குத்து படத்துக்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார். சினிமாவால் பல மாற்றங்கள் சமுதாயத்தில் நடந்திருக்கிறது ஆனால் இது போன்ற படங்கள் கலாச்சாரத்தையே சீர்குலைத்துவிடும் என்று கண்டித்தார். ஆனால் அதை ஏற்காத சந்தோஷ் டைரக்டர் பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தில் ஒரு ஸ்டில்லை வெளியிட்டு இது ஆபாசமில்லையா என்று கிண்டல் செய்திருந்தார்.இதனால் அவர் ஒட்டு மொத்த திரையுலகினர் கோபத்துக்குள்ளானார்.

இதையடுத்து பின்னர் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர் அடுத்து வெளியிட்ட இரண்டாம் குத்து போஸ்டரும் அருவெறுப்பாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் ஆயுதபூஜையன்று நல்ல பிள்ளைகள் போல் கற்பூர ஆரத்தி காட்டும் படத்தை நெட்டில் வெளியிட்டிருந்தனர். இரண்டாம் குத்து படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தைத் தடை செய்ய கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாம் குத்து பட குழுவினருக்கு ஐகோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை