நடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் நடிப்பது போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்கவே சாய் பல்லவி விரும்பினார். தமிழில் அவர் ஹீரோயினாக அறிமுகமான படம் தியா. இதில் ஹீரோ கிடையாது. சாய் பல்லவிதான் பிரதான வேடத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார். ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்து கலக்கியிருந்தார். தனுஷுடன் இணைந்து ஆடிய ரவுடி பேபி பாடல் உலக அளவில் அதிகம் பேர் பார்த்த பாடலாக இடம் பிடித்தது. இதையடுத்து செல்வராகவனின் என் ஜி கே படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. தெலுங்கு பட தயாரிப்பாளர்தில் ராஜு தயாரிக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இப்படத்தை இளம் இயக்குனர் அனி ரவிபுடி இயக்குகிறார். கதை கேட்டு நன்றாக இருப்பதாக சொன்ன சாய்பல்லவி தற்போது அப்படத்தில் திடீரென்று நடிக்க மறுத்து விட்டார். அதற்கு காரணம் தெரியவில்லை. இதனால் இயக்குனரும், தயாரிப்பாளரும் ஷாக் ஆகி உள்ளனர். சாய்பல்லவி இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு பிரபல ஹீரோக்கள் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். தெலுங்கில் ஒரு படத்தை மறுத்த அவருக்கு அடுத்து நானி, சர்வானந்த் ஆகியோருடன் ஜோடியாக நடிக்க 2 படங்கள் தேடி வந்திருக்கிறது.ஹீரோயின்களை பொறுத்த வரை நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் தொடக்க காலம் முதல் பிரபல ஹீரோக்களுடன் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் போதும் போதும் என்கிற அளவுக்கு ஜோடியாக நடித்துவிட்டனர். சுமார் 10 வருடத்திற்கு பிறகு தான் அவர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதில் ஒரு சில படங்கள்தான் வெற்றி பெற்றன. இதனால் அவர்கள் மீண்டும் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கின்றனர்.
சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் இருவருமே நல்ல வரவேற்புடன் அறிமுகமாயினார். விஜய், விஷால் என்று ஜோடி போட்டுக்கொண்டிருந்தார் கீர்த்தி. நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்த பிறகு அவர் ஹீரோயின் கதைகளுக்கு முக்கியத்தும் கொடுக்கத் தொடங்கினார். தமிழில் பெண்குயின், தெலுங்கில் மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே ஒடிடி தள ரிலீஸுக்கு சென்றுவிட்டது குறிபிடத்தக்கது. இளம் வயதிலேயே அவர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை ஏற்பதால பல பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். இளமை இருக்கும் போது முதிர்ச்சியான பாத்திரங்களில் நடிக்க முடியும் முதிர்ச்சி ஆகிவிட்டால் இளைமையாக நடிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தால் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெற முடியும் என்று கோவுட்டில் முணுமுணுக்கின்றனர்.