கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அமிதாபச்சன், ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி , எஸ்பி.பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா என பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டாலும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். டாக்டர் நடிகர் ராஜசேகர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம் அடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றில்லாத போதிலும் இந்தி நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் சேது, வடிவேல் பாலாஜி ஆகியோர் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். இந்நிலையில் புதுமுகங்கள் நடித்த விசிறி படத்துக்கு இசை அமைத்தவர் நவீன் சங்கர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் சாலிகிராமத்தில் மியூசிக் ஸ்டுடியோ வைத்திருந்தார்.
வீட்டுக்கு ஒரே மகனான நவீன் சங்கர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் இல்லை என்று கூறப்படுகிறது.
தற்போது பாலிவுட் நடிகர் ஒருவர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஃபராஸ் கான் இன்று காலமானார். இந்த தகவலை இந்தி நடிகை பூஜா பட் பகிர்ந்து கொண்டார். தனது சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிடும்போது, நடிகர் பாராஸ் கான் எங்களை விட்டு சென்று விட்டார் என்ற செய்தியை ஒரு கனமான இதயத்துடன் வெளிப்படுத்துகிறேன். அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. அவரது குடும்பத்துக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள். அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப இயலாது என குறிபிட்டிருந்தார்.
நடிகர் ஃபராஸ் கான் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், கிட்டத்தட்ட ஒரு வருடமாக இருமல் மற்றும் மார்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நரம்பியல் கோளாறாலும் அவதிப்பட்டு வந்தார், மேலும் அவரது குடும்பத்தினரும் அவருக்காக நிதி திரட்டலைத் தொடங்கினர். முன்னதாக, பூஜா பட் டிவிட்டரில் நெட்டிசன்களை நடிகரின் சிகிச்சைக்கு நிதி பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். “தயவுசெய்து ஃபராஸ் கான் சிகிச்சைகாக முடிந்தால் நிதிஉதவி அளிக்கவும். நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் "என்று கடந்த அக்டோபரில் பூஜா ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து இந்தி நடிகர் சல்மான் கான் நிதி உதவி வழங்கினார் மற்றும் ஃபராஸ் கானின் மருத்துவ செலவினங்களை செலுத்தினார். ஃபராஸ் கான் 1996ல் பாலிவுட்டில் ஃபராப் படம் மூலம் அறிமுகமனார். பிரித்வி, லவ் ஸ்டோரி, மெஹந்தி, சந்த் புஜ்ஹ கயா போன்ற சில படங்களில் நடித்தவர் பின்னர் டிவி தொடர்களில் நடித்து வந்தார். ஃப்ராஸ்கான் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.