தீபாவளிக்கு புதிய பட ரிலீஸ் சிக்கல்.. தியேட்டர் அதிபர்கள் புதிய முடிவு..

by Chandru, Nov 6, 2020, 11:02 AM IST

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களை பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படாமலிருந்தது. இந்நிலையில் தியேட்டர், மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் முதல்வரைச் சந்தித்து தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கேட்டனர். அதை ஏற்று வரும் நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. 50 சதவீத இருக்கைகளுடன் கொரோனா வழிகாட்டுதல் முறைகள் கடைப்பிடிக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எண்ணத்தில் மகிழ்ச்சி அடைந்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் வி எப் எக்ஸ் கட்டணம் வசூலிக்காமலிருந்தால் மட்டுமே படங்களை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிபாளர்கள் நடப்பு சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்தார். மற்ற தயாரிப்பாளர்களும், இதையே வலியுறுத்தினர். இது தியேட்டர் அதிபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சரைச் சந்தித்து முறையிட்டனர். அமைச்சரும் 10ம் தேதி படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் தயாரிப்பாளர்கள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து அதில் வரும் வருமானத்தில் 50 சதவீதத்தைத் தயாரிப்பாளர்கள் தியேட்டர்காரர்களுக்கு அளித்தால் வி பி எப் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று இன்னொரு கோரிக்கை வைத்தனர். புதிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யாவிட்டால் பிரபல நடிகர்களின் பழைய சூப்பர் ஹிட் படங்களைத் திரையிடவும் தியேட்டர் அதிபர்கள் எண்ணி உள்ளனர். ஏற்கனவே பாண்டிச்சேரி போன்ற பிற இடங்களில் விஜய், ரஜினி நடித்த பழைய படங்களைத் திரையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்குத் திரைக்கு வர வாய்ப்புள்ள படங்களின் தியேட்டர் ஒப்பந்தம் குறித்த புதுப்பிப்பு இன்னும் கிடைக்காததால், தீபாவளி நாளில் மட்டுமே தியேட்டர்களைத் திறப்பதாக சில தியேட்டர்காரர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். ஜீவா நடித்த களத்தில் சந்திப்போம், சசிகுமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் மற்றும் சந்தோஷ் பி ஜெயகுமாரின் இரண்டாம் குத்து ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் நிலை பற்றி இன்னும் தெளிவாகவில்லை.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை