2020யில் ஹீரோ, வில்லன் ஆகலாம்.. வில்லன் ஹீரோ ஆகலாம்..

by Chandru, Nov 6, 2020, 14:07 PM IST

கோலிவுட்டில் 70கள் தொடங்கி 90 கள் வரையிலுமே ஹீரோவாக நடிப்பவர் வயதாகும் வரை ஹீரோவாகவே நடிப்பார்கள். எம்ஜிஆர். சிவாஜி அப்படித்தான் நடித்தார்கள். ஆனால் மற்ற ஹீரோக்கள் வயதான பிறகு வில்லனாக நடிக்கத் தொடங்கினார்கள். வெள்ளிகிழமை நாயகன் என்று அந்த காலத்தில் பெயர் பெற்றவர் ஜெய்சங்கர். வாரம் தவறாமல் வெள்ளிகிழமையானால் அவரது புதிய படம் ரிலீஸ் ஆகிவிடும் எனவே அவரை அப்படி அழைப்பார்கள். வயதான பிறகு ரஜினிக்கு வில்லனாக முரட்டுக்காளை படத்தில் நடித்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் வில்லனாக நடித்தார். ஆனால் இது 2020. இப்போது ஒரு படத்தில் வில்லன் மறு படத்தில் ஹீரோ என்று நடிகர்கள் நடித்து வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.

தற்போது மாமனிதன், லாபம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுபோல் பாபி சிம்ஹா என்கிற சிம்ஹா. திருடன் போலீஸ், உருமீன் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பேட்ட, சண்டமொழி 2 படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது 'வசந்த முல்லை' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிறந்த நாள் கொண்டாடும் சிம்ஹா நடிக்கு வசந்த முல்லை புதிய படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார். சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'வசந்த முல்லை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

சிம்ஹாவுக்கு நாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் விருந்து இப்படத்தில் காத்திருக்கிறது என்று தெரிவித்தார் இயக்குனர். எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது. வசனம் பொன்னி வளவன், ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேஷன், எடிட்டர் - விவேக் ஹர்ஷன், சண்டைக் காட்சிகள் - ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சில்வா.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை