ஐபிஎல் 2020 மாற்றப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

by Loganathan, Nov 6, 2020, 13:42 PM IST

ஐபிஎல் 2020 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இன்றைய எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி டெல்லியுடம் தகுதி சுற்று இரண்டில் விளையாட வேண்டும். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பரிசுத் தொகை பற்றிய கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி இந்தியாவில் தகுந்த சூழ்நிலை இல்லாததால் நடைபெறவில்லை. இறுதியாக ஐக்கிய அரபு எமிரகத்தில் நடத்த அனுமதி பெறப்பட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நட்டம் தான். இந்நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் பரிசுத் தொகையில் பல்வேறு மாற்றங்களும், சில புதுமைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிசிசிஐ இந்தாண்டிற்கான ஐபிஎல் சீசனின் பரிசுத் தொகையில் பல்வேறு மாற்றங்களை செய்து அதனை அனைத்து அணி நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் அதிகபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவம்பர் 10 ம் தேதி இறுதி போட்டி நடைபெற இருப்பதால் அனைவரின் பார்வையும் பரிசுத் தொகையின் மேல் உள்ளது. கடந்த 2019 ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் இறுதி போட்டியை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி முதல் பரிசாக அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் இறுதி போட்டியை வெல்லும் அணிக்கு முதல் பரிசு ரூ.10 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு கடந்தாண்டு 12.5 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை இந்த பரிசுத் தொகை 6.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தகுதி சுற்றில் தோல்வி பெறும் இரு அணிகளுக்கும் தலா 4.375 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்கள் நல்ல உடல் நிலையிலும், சிறப்பாகவும் உள்ளனர். மேலும் அவர்களுக்கு விளம்பரத்தின் மூலம் வருமானத்தை பெற பல்வேறு வழிகள் உள்ளதால், பரிசுத் தொகை குறைப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 2019 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பி மகுடம் சூடும் வீரர் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை சூடும் பந்து வீச்சாளருக்கும் தலா 10 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை அவர்களுக்கு எந்தவித பரிசுத் தொகையும் இது வரை அளிக்கப்படவில்லை.

மேலும் 2019 சீசனில் எமர்ஜிங் பிளேயர் மற்றும் மதிப்புமிக்க வீரர் ஆகியோருக்கு தலா 10 இலட்சம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் எந்தவித பரிசு தொகையும் அறிவிக்கப்படவில்லை.

You'r reading ஐபிஎல் 2020 மாற்றப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை