ரகிட ரகிட நடிகரின் அப்டேட் நாளை.. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

by Chandru, Nov 8, 2020, 14:56 PM IST

பட்டாஸ் படத்துக்கு பிறகு அடுத்த படமாக தனுஷ் நடிப்பில் திரைக்கு வருவதாக இருந்தது ஜெகமே தந்திரம். மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் திறக்கப்படாமலிருந்ததால் ஜெகமே தந்திரம் படம் ஒடிடி தளத்தில் வெளிவரும் என்று பேசப்பட்டது. அதற்கு பட நிறுவனம் மறுப்பு தெரிவித்து வந்தது. ஜெகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் வெளிடப்பட்டது. அது இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு படம் பற்றி அப்டேட் எதுவும் இல்லாத நிலையில் பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடமும், தனுஷிடமும் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். இதற்கிடையில் தனுஷ் அட்ராங்கி ரே இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க சென்றார். கொரோனா ஊரடங்கு தளர்வில் கடந்த அக்டோபர் 15ம் தேதியே தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் திறக்க அனுமதி வழங்கப்படாமலிருந்தது. இதையடுத்து தியேட்டர் அதிபர்கள் தமிழக முதல்வரை சந்தித்து தியேட்டர் திறக்க அனுமதி கோரினர். அந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர்கள், மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகு தியேட்டர்களை 10ம் தேதி முதல் திறக்கலாம். 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வழிகாட்டுதல்முறைகள் தரப்பட்டது. அதை ஏற்று 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க ஏற்பாடு நடக்கிறது. வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க மருந்து தெளிக்கும் பணிகளும் நடக்கிறது. புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் புதிய படங்களை விபிஎப் கட்டணம் ரத்து செய்தால் மட்டுமெ ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர். ஆனாலும் தீபாவளி வெளியீடாக சில படங்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தனுஷின் ஜெகமே தந்திரம் தீபாவளிக்கு வெளிவருமா? படத்தின் அப்டேட் என்ன? என்று ரசிகர்கள் கேட்டுவரும் கேள்விகளுக்கு நாளை அப்டேட் வரும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

You'r reading ரகிட ரகிட நடிகரின் அப்டேட் நாளை.. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை