அரசியல் என்ட்ரி எப்போது? நடிகர் சூர்யா அதிரடி பதில்..

by Chandru, Nov 9, 2020, 16:27 PM IST

கோலிவுட் நடிகர்கள் பலர் அரசியல் ஆசையில் இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன். விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விஷால் எனப் பலர் அரசியல் களத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்தி உள்ளனர். இவர்களில் ரஜினி காந்த், விஜய், அஜீத் தவிர மற்றவர்கள் அரசியலில் குதித்து விட்டார்கள்.விஜயகாந்த் தேமுதிக கட்சி, சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி, கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி அரசியல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் தனது கட்சி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து 3 நாள் ஆலோசனை நடத்தினார் கமல்ஹாசன். ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்பதாகக் கூறி உள்ளார். நடிகர் விஷால் தனிக்கட்சி தொடங்காவிட்டாலும் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் அரசியல் பேசுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும் சமீபத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் விஜய் பெயரில் தேர்தல் அலுவலகத்தில் கட்சி பதிவு செய்திருக்கிறார். இதனால் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.தனது ரசிகர்கள் எனது தந்தை தொடங்கி இருக்கும் கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வதோ அல்லது தேர்தல் பணியாற்றுவதோ கூடாது. எனக்கும் என் தந்தை தொடங்கி இருக்கும் கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு ஏதும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

விஜய்யின் இந்த அறிக்கைக்குப் பதில் அளித்தார் எஸ்.ஏ.சந்திர சேகர். அவர் கூறியதாவது:
நான் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன். நான் கட்சி பதிவு செய்வதை அவரிடம் சொல்லவில்லை. விஜய் என்ற பெயர் எனக்குப் பிடிக்கும் எனது பெரும்பாலான படங்களில் ஹீரோவுக்கு விஜய் என்று தான் பெயரிட்டிருக்கிறேன். மேலும் விஜய் என்றால் வெற்றி என்று பொருள். விஜய்யைச் சுற்றி ஒரு விஷ கூட்டம் இருக்கிறது. நான் எது செய்தாலும் அது விஜய்க்கு எதிரானது என்று அவர்கள் விஜய்யிடம் சொல்கிறார்கள். நான் விஜய்யின் தந்தை அவருக்குக் கெடுதல் செய்ய மாட்டேன். தற்போது இருக்கும் அந்த கூட்டம் ஒரு நாள் விஜய்க்கு எதிராகக் கூட மாறும். விஜய் என்னைத் தேடி வருவார்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார், இந்த விஷயம் இத்துடன் நிற்கிறது.

இதற்கிடையில் சமீபகாலமாக நடிகர் சூர்யா துணிச்சலாகக் கருத்துக்களைச் சொல்லி வருகிறார். மத்திய அரசின் கல்விக் கொள்கை பற்றி அவர் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்தார். அவர் கூறிய சில கருத்துக்கு நீதிபதி ஒருவர் கோர்ட்டில் கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கில் சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள். அதை சூர்யா ஏற்றுக்கொண்டார். சூர்யாவுக்கும் அரசியல் ஆசை வந்திருப்பதாகப் பலரும் பரவலாகப் பேசினார்கள். அதுகுறித்து சூர்யா கூறியதாவது:
தற்போதைக்கு அரசியல் நுழையும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. என்னுடைய மனதில் அப்படி எண்ணம் இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால் கண்டிப்பாக இல்லை. இதை என் இதயத்திலிருந்து சொல்கிறேன் என்றார்.

You'r reading அரசியல் என்ட்ரி எப்போது? நடிகர் சூர்யா அதிரடி பதில்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை