Friday, Mar 5, 2021

பாகுபலி ஹீரோ அருகிலிருப்பது செல்ல நாயா, சிங்கக் குட்டியா?

by Chandru Nov 11, 2020, 09:55 AM IST

பாகுபலிக்கு பிறகு பெரிய வெற்றிப் படத்தை அளிக்க எண்ணியிருந்தார் பிரபாஸ். தமிழ், தெலுங்கில் உருவான சஹோ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அடுத்த வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். ஐரோப்பாவின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு கால காதல் கதையான ராதே ஷியாம் படத்தில் நடித்து வருகிறார். இதை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

கொரோனா கால கட்டம் முடிந்ததும் இத்தாலியில் இப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற படக் குழு ஒரு மாதமாக முக்கிய காட்சிகளைப் படமாக்கியது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்த நிலையில் படப்பிடிப்பு நடத்த அவர்கள் போராட வேண்டி இருந்தது.அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி ராதே ஷியாமின் ஒரு மாத கால கால்ஷீட்டை அங்கு முடித்தார் பிரபாஸ்.

படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மீண்டும் இந்தியாவுக்கு செல்வதற்கு முன்பு சில நாட்கள் ஐரோப்பிய நாட்டில் தங்கி அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க பிரபாஸ் விரைவில் ஹைதராபாத் செல்ல உள்ளார். ராதே ஷியாமில் சச்சின் கெடேகர், பிரியதர்ஷி, பாக்யஸ்ரீ, முரளி சர்மா, சத்யன் சிவகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.தற்போது பணிக்காக மும்பையில் இருக்கும் பிரபாஸ், சார்மி கவுர் மற்றும் பூரி ஜகநாத் அலுவலகத்தைப் பார்வையிடச் சென்றார். அங்கு ஒரு செல்ல நாய், ஒரு பெரிய அலாஸ்கன் மலாமுட் உடன் தோற்றமளிக்கும் ஒரு அழகான படத்தைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக்கொண்டார். அந்த நாயைக் கண்டதும் ஒரு நிமிடம் ரசிகர்கள் மிரண்டுபோனார்கள். இது நாயா அல்லது சிங்கக்குட்டியா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அதன் தோற்றத்தின் கம்பீரம் மிரள வைக்கிறது. சார்மி கவுர் வளர்க்கும் செல்ல நாய் இது.

பிரம்ஹாஸ் சார்மி கவுரின் செல்ல நாய் அருகில் பிரபாஸ் அமர்ந்திருக்கும் படத்தைப் சார்மி பகிர்ந்துகொண்டு, என் 9 மாத ஆண் குழந்தையுடன் டார்லிங் (பிரபாஸ்)
ஒரு அலாஸ்கன் மலாமுட்டு டன் பிரபாஸைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சில நிமிடங்களில், சார்மி கவுரின் பதிவு இணையத்தில் வைரலாகியது.பிரபாஸ் ராதே ஷ்யாம் படப் பிடிப்பை முடித்தவுடன் ஆதி புருஷ் படத்தில் நடிக்கவுள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் ராமாயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் இயக்குனர் நாக் அஸ்வின் வெளியிட்ட பதிவில் "பிரபாஸை கடவுள் ராமராகப் பார்ப்பது உற்சாகத்தைத் தருகிறது. மிகச் சில நடிகர்களே ராமராக இதற்கு முன் பெரிய திரையில் நடித்துள்ளனர். மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார் நாக் அஸ்வின். 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்குப் பிறகு பூஷண் குமார் -பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் தியேட்டரில் வெளியாக உள்ளது.

You'r reading பாகுபலி ஹீரோ அருகிலிருப்பது செல்ல நாயா, சிங்கக் குட்டியா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அதிகம் படித்தவை