ஹாலிவுட் போகும் பிக்பாஸ் ஹீரோயின்..

by Chandru, Nov 12, 2020, 14:27 PM IST

பலரின் பாராட்டைப் பெற்ற வல்லதேசம் படத்தை இயக்கியவர் இயக்குனர் என்.டி.நந்தா. தற்போது இயக்குநர் இயக்கிய 120 ஹவர்ஸ் (120 hours) என்ற ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார்.உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் என்.டி.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டு மென்று இயக்குனர் பாரதி ராஜா வாழ்த்தியுள்ளார்.என்.டி.நந்தா இயக்கிய "120 hours" என்ற ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பார்த்து, வியந்த தோடு, டிரெய்லரில் மிரட்டியிருக்கிறாய் என்று புகழ்ந்து நந்தாவிற்கும், படத்தில் அறிமுகமாயிருக்கும், BIG BOSS புகழ் சாக்ஷி அகர்வால், பிரணய் காளியப்பனுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.

"தமிழர்களின் இதயத் துடிப்பெல்லாம் இப்போது, பிக்பாஸில் தான் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களையெல்லாம், தங்கள் வீட்டிற்குள் இருப்பவர்களாகவே அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். அந்த வகையில் சாக்ஷி அகர்வால் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலம். பாலிவுட்டில் இருப்பவர்கள் மட்டும் தான், ஹாலிவுட்டை கலக்க முடியும் என்ற விதியை மாற்றி, சாக்ஷி அகர்வாலின் நடிப்பின் அசாத்தியமான திறமையைப் பார்த்த நந்தா அவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறார்.சாக்ஷி அகர்வாலின் இந்த அறிமுகம், அவரை சினிமாவின் அடுத்த தளத்திற்குக் கொண்டுபோகுமென அவர் நம்புகிறார்.

ராஜா ராணி வேடத்தில் அறிமுகமானார் சாக்‌ஷி அகர்வால். யோகன், திருட்டி விசிடி. அதியன், க க க போ போன்ற சில படங்களில் நடித்தார். பின்னர் ரஜினியின் காலா படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பெரிதாகப் பெயர் வாங்கமுடியாமல் போராடி வந்த சாக்‌ஷி தற்போது ஷாலிவுட் படத்தில் நடிப்பது பலரையும் அச்ச்ர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஹாலிவுட்டில் ப்ளட் ஸ்டோன் என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்தார். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அமைரா தஸ்தூர் போன்றவர்கள் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை