மாலத்தீவில் மல்லாக்க கவிழ்ந்த நடிகை..

by Chandru, Nov 12, 2020, 17:19 PM IST

கொரோனா பரவல் இருந்தாலும் சில பிரபலங்கள் தங்களது பணிகளைக் கவனிக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு பக்கம் ரஜினிகாந்த் அண்ணாத்த ஷூடிங்கில் பங்கேற்க கெடு விதித்து வருகிறார். மறுபக்கம் கமல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். டீஸரில் நடித்து அதைச் சமீபத்தில் வெளியிட்டார். நடிகர் சிரஞ்சீவி காத்திருந்தது போதும் என்ற 10 மாதத்துக்குப் பிறகு ஆச்சார்யா ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றார். துரதிருஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. குணம் அடைந்த பிறகு கலந்து கொள்கிறார்.

சீனியர் நடிகர் அமிதாப்பச்சன் டிவி விளம்பரம், டிவி ஷோ என்று மாறி மாறி நடித்து வருகிறார். நடிகைகளும் தங்கள் பணிகளை தொடங்கி விட்டனர். இந்தியன் 2 ஷூட்டிங்கிற்காக காத்திருந்தார் காஜல் அகர்வால் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரியவில்லை காதலன் கவுதம் கிட்ச்லுவுக்கு கழுத்தை நீட்டி திருமணத்தை முடித்தார் . மீண்டும் படப்பிடிப்பிற்கு காத்திருந்தபோது தேனிலவைக் கூட தள்ளி வைத்தார்.

ஆனால் அழைப்பு வந்தபாடில்லை. சட்டென கணவருடன் மாலத்தீவிற்குத் தேனிலவு கிளம்பிவிட்டார். தேனிலவைக் கணவருடன் படு ஜோராக அனுபவித்து வருகிறார் காஜல். தான் நடிகை என்பதால் கணவரை நடிகர் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஜமாய்க்கிறார். அங்குள்ள அழகிய இடங்களில் கணவருடன் இணைந்து கட்டிப் பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

பலவித போஸ்களில் புகைப்படங்களை வெளியிடுள்ள காஜல் கால்களை தரையில் ஊன்றி உடலை அப்படியே மேலே மல்லாக்க உயர்த்தி அளித்திருக்கும் அழகிய போஸ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதற்கு பாராட்டு குவிந்துள்ளது. திருமண குதுகலம் காஜலின் முகத்தில் தெரிவதாக கமெண்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை