உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுனில் பல நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட பல பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்தியா திரும்பினர். ஆனால் கோலிவுட், பாலிவுட் நடிகை ஒருவர் வெளிநாடு இன்னும் இந்தியா திரும்பமுடியாமல் சிக்கி இருக்கிறார். தமிழில் ரஜினியுடன் முரட்டு காளை, கமலுடன் உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்தவர் ரதி. பின்னர் இந்தி படங்களில் நடித்து வந்தார். கொடிய கொரோனா வைரஸ் தாக்கி வாழ்க்கையை முடக்குவதற்கு சற்று முன்பு ரதி போலந்திற்கு சென்றார். ஆனால் தீபாவளிக்கு கூட அவரல் அங்கிருந்த திரும்ப முடியவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் போலந்த் சென்றார் ரதி தனது கணவர் அனில் விர்வானியுடன் இன்று வரை வரமுடியவில்லை. அதற்கு காரணம்? மூத்த நடிகை தனது செல்ல நாய் ஸ்டூவர்ட் லிட்டில் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.
அங்கிருந்த நாயை விமானத்தில் அழைத்த வர முடியாதளவுக்கு அங்கு விதிமுறைகள் உள்ளன. வெளிப்படையாக தனது செல்லப்பிராணியை போலந்தில் விட்டுவிட்டும் ரதியால நாட்டிலிருந்து வெளியேற முடியாது. ஸ்டூவர்ட் லிட்டில் செல்ல நாயை அவர் நான்கு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இதை உறுதிப்படுத்திய ரதியின் மகன் தனுஜ், "ஆமாம், எங்களுக்கு இம்முறை தீபாவளி கிடையாது. மம்மி மும்பையில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மாதங்கள் போலந்துக்குச் செல்வார். அங்கு அவர் சகோதரியுடன் உணவகங்களை அமைத்திருக்கிறார். இந்த வாழ்க்கை மிக விரைவாக மாறும். டிசம்பரில் நான் அம்மாவயும், சித்தியையும் சந்திக்கப் போக உள்ளேன். எங்கள் ஸ்டூவர்ட் லிட்டில் உடன் நாங்கள் மீண்டும் பயணிக்க முடியும் என்று நம்புகிறேன்." இதுபற்றி ரதி கூறியபோது, "போலந்தில பல விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன" என்று கூறினார்.