எல்லோரும் எதிர்த்தாலும் ஒருபார்வை எனக்கு போதும்.. கங்கனா ரனாவத் உருக்கம்..

by Chandru, Nov 13, 2020, 16:51 PM IST

நடிகை கங்கனா ரனாவத் தனது சகோதரர் அக்ஷத் ரனாவத்தின் திருமணத்தை கொண்டாடுவதற்காக உதய்பூர் வந்தார். தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்தார். அனைத்து வித்தியாசமான பாரம்பரிய உடைகளையும் அணிந்து மகிழ்ந்த அவர் அதனை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். உதய்பூரில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக, நடிகை ஒரு லெஹெங்காவைக்கொண்டு வந்து கனமான நகைகளுடன் தனது அழகிய தோற்றத்தை வெளிப்படுத்தினார். சகோதரருடனான புகைப்படங்களைத் தவிர, நடிகை திருமண அரங்கிலிருந்து தனது சகோதரி ரங்கோலி சாண்டலுடன் நிறைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். கங்கனா தனது சமூக ஊடகப் பக்கத்தில் திருமணக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் பின்னர் அவர்கள் உதய்பூரிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருவதாக எழுதியுள்ளார்.

தனது சகோதரி ரங்கோலியுடன் ஒரு புகைப்படத்தைப் பகிரும்போது, ​"என் நெருப்புக்கு நெய்" என்று ரங்கோலி தனக்கு எல்லாமுமாக இருக்கிறார் என்பதை உதாரணம் மூலம் விளக்கினார். மேலும் எல்லோரும் என்னை எதிர்த்தாலும், சகோதரியின் கண்களில் தெரியும் அந்த ஒளி அதெல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் எல்லாம் சாதிக்க முடியும் என்ற நம்பிகையை எனக்கு தருகிறது என்றார் கங்கனா. தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் நடிகை முக்கிய கதாபாத்திரத் தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார். படத்திற்கு நடிகை 20 கிலோ எடை அதிகரிக்க வேண்டியிருந்தது. இப்படத்துக்காக கங்கனா பரதநாட்டியத்தைக் கற்றுக் கொண்டார் மற்றும் மேலும் முதுகில் காயம்பட்டார். ஆனால் கதாப்பாத்திரத்தின் முழுமைக்கு ஒரு பங்கைக் செலுத்துவதை காட்டிலும் பெரிய மனநிறைவு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை