சிம்பு நாளை அதிகாலை 4.32க்கு தீபாவளி ட்ரீட்... ரசிகர்கள் உற்சாகம்..

by Chandru, Nov 13, 2020, 19:01 PM IST

கடந்த ஒன்றரை வருடமாக நடிக்கமாமல் ஒதுங்கி இருந்த சிம்பு 40 நாட்களில் ஈஸ்வரன் படத்தை நடித்து முடித்தார். சுசீந்திரன் இயக்கி இருக்கிறார். சிம்பு நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. முன்னதாக ரசிகளுக்கு தீபாவளிக்கு ட்ரீட்டாக ஈஸ்வரனின் டீஸர் நாளை அதிகாலை 4.32 மணிக்கு வெளியிடுகிறார். இதுபற்றி சிம்பு, லட்சுமி தெய்வத்தின் ஆசீர்வாதத்துடன் ஈஸ்வரன் டீஸர் நாளை அதிகாலை வெளியிடப்படும். அனைவருக்கும் நன்றி. ஈஸ்வரன் குழு சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை அறிவித்து, படம் நான்கு மொழிகளில் வெளியிடும் என்று அறிவித்தது. சிலம்பரசன் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர் இணைவது இதுவே முதல் முறை.

சிலம்பராசனின் உடல் தோற்றத்தில் மேற்கொண்ட மாற்றம் பலரை ஈர்த்துள்ளது. சிலம்பரசன் அப்போது பகிர்ந்து கொண்டார், இந்த அழகான பயணத்திற்கு உறுதுணையாக இருந்த ஈஸ்வரன் குழு அனைவருக்கும் முழு நன்றி! அனைத்து அன்பும் ஆதரவும் காட்டிய ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி என்றார் சிம்பு. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு திண்டுக்கலில் இருந்துநேராக பாண்டிச்சேரி சென்று வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் பங்கேற்றார். இப்படம் முடிந்தவுடன். டிசம்பர் மாதம் முதல் லோகேஷ்கனகராஜ் இயக்கத்திலும் தொடர்ந்து ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கத்திலும் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் சிம்பு.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை