விக்ரம் ஆரம்பிக்கலாமா? உலகநாயகன் தீபாவளி ட்ரீட்..

by Chandru, Nov 14, 2020, 18:37 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு விக்ரம் என் பெயரிடப்பட்டி ருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தின் டைட்டில் கமலஹாசன் பிறந்தநாள் அன்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஏறகனவே வெளியிடப்பட்ட டீஸரில் கமல் நவீன துப்பாக்கிகளை ஜன்னலிலும் மற்ற இடங் களிலும் மறைத்து வைத்து விட்டு சில முக்கியஸ்தர்களை விருந்துக்கு அழைக்க அவர்கள் வரிசையாக வந்து தலை வாழை இலையில் பரிமாறபட்ட விருந்தில் அமர்கின்றனர். அடுத்து என்ன செயயப்போகிறார் கமல் என்று என்ணும்போது கத்தி களை வீசி விக்ரம் என பட டைட்டிலை அறிவித்தார். இன்றைய தீபாவளி தினத்தில் சிறு டீஸர் ஒன்றை வெளியிட் டிருக்கிறார். அதில் ஆரம்பிக்க லாமா என்றபடி சோற்றையும், கறிக்குழம்போடு சேர்த்து பிசைகிறார். பிறகு அருகில் இருக்கும் கத்தியை ஆக்ரோஷ மாக விக்ரம் என்று கத்திய படி வீசுகிறார்.

கமல் நடிக்கும் விக்ரம் படம் இரவில் நடக் கும் கதையாக உருவாக உள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி படங்கள் இரவில் எடுக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை