அங்காடி தெரு இயக்குனர் உதவியாளரின் ஹாரர் படத்தில் ஜெயில் நாயகி ..

Advertisement

தேசிய விருது பெற்ற இயக்கு நர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற சிறந்த படங்களிலும் இதற்குத்தானே ஆசைப்பட் டாய், காஷ்மோரா போன்ற படங்களிலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற் றிய ரமேஷ் பழனிவேல் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஹாரர் படமாக இது உருவாகிறது. விண்டோ பாய்ஸ் நிறுவனம் சார்பாக ஆர்.சோமசுந்தரம் தயாரிக்கிறார்.

பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படங்களின் ஒளிப்பதிவாள ரான ஆர்.எஸ்.ஆனந்தகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவா ளராக பணியாற்றுகிறார்.

விஜய் ராஜன் கலை இயக்குநராகவும் எம்.ரவிக்குமார் படத் தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்ணனி கோர்ப்பு வேலைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. எல்லா கால கட்டங்களிலும் ஹாரர், சஸ்பென்ஸ்,திரில்லர் வகை திரைப்படங்கள் சரியாக சொல்கிற பட்சத்தில் பெரிதும் வெற்றியடைந்துள்ளன. பீட்ஸா,ராட்சஸன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.அப்படியான ஒரு புதிய முயற்சியாக சஸ்பென்ஸ், திரில்லர். திகில் என எல்லாம் கலந்து சற்றும் சுவாரஸ்யம் குறையாத வகை யில் உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகி யுள்ளது.
ராதிகா அவர்களின் ராடன் நிறுவனம் தயாரித்து சரத்கு மார் பிரகாஷ்ராஜ் சேரன் நடிப் பில் வெளிவந்த சென்னையில் ஒருநாள் படத்தில் பார்வதி மேனனுக்கு ஜோடியாக நடித்த சச்சின் இப்படத்தின் நாயக னாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் ஜெயில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி யுள்ள அபர்நதி கதைநாயகி யாக நடித்துள்ளார்.இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளை தொடரின் மூலம் பிரபலமா னவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கும்கி அஸ்வின் மற்றும் சுருதி பெரியசாமி எனும் அறிமுக நடிகையும் இதில் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளனர்.

பரபரப்பான திரைக்கதை வித்தியாசமான காட்சியமைப் புகளோடு உருவாகிக் கொண் டிருக்கும் இப்படம் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக திரையரங்குகளில் விரைவில் வெளிவருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>