ரஜினி தீபாவளி கொண்டாடினார்.. வீட்டு வாசலில் தவுசன் வாலா பட்டாசு வெடித்தார்..

by Chandru, Nov 14, 2020, 19:05 PM IST

சூப்பர் ஸ்டர் ரஜினிகாந்த் தற்போது அண்ணத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்குகிறார். நயந்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடை பட்டிருந்தது. கொரோ னா தளர்வு அறிவிக் கப்பட்ட பிறகும் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

தீபாவளி தினத்தில் வழக்கமாக குடும்பத்துடன் வருடா வருடம் ரஜினிகாந்த் பட்டு வேட்டி, பட்டு சட்டை உடுத்தி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து பகிர்வார். இந்த கொரோனா காலகட்டத்தில் அவர் தீபாவளி கொண்டாடுவாரா என்று என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் இன்று தவுசன் வாலா பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார். ரஜினி பட்டாசு வெடிக்கும் படம் வைரலாகி வருகிறது.

வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தனிகட்சி தொடங்கி தேர்த லில் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் இன்னும் கட்சி தொடங்கவில்லை. சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை யில் எனது அரசியல் நிலைப் பாடு பற்றி விரைவில் தெரி விப்பேன் என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை