காதலனுக்காக காத்திருக்கும் பிரபல நடிகை.. டேட்டிங்கிற்கும் ரெடி..

by Chandru, Nov 15, 2020, 09:43 AM IST

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிஸியாக நடித்த சில ஹீரோயின்கள் கொரோனா காலகட்டத்தில் மனதளவில் பாதிப்புக்குள்ளாகினார். தினமும் வேகமாக படப்பி டிப்புக்கு பறந்து கொண்டிருந்த நிலையில் வீட்டில் முடக்கி போட்டதுபோல் ஆகி விட்டனர். நடிகைகள் தமன்னா, நிக்கி கல்ராணி போன்றவர்கள் கொரோனா பாதிப்புக்கும் உள்ளானார்கள். அவர்கள் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். நடிகை காஜல் அகர்வால் பாடுதான் திண்டாட்டம் ஆகிவிட்டது. அவரை திருமணம் செய்து கொள்ள கேட்டு குடும்பத்தினர் தொந்தரவு செய்யத் தொடங்கிவிட்டனர். இந்தியன்2 படப்பிடிப்பு முடித்த பிறகு திருமணம் செய்யலாம் என்று சொல்லி சமாளித்துப்பார்த்தார். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு காலவரையின்றி தள்ளிப் போய்க்கொண்டிருந்ததால் குடும்பத்தினர் விருப்பத்திற்கு சம்மதித்தார். தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். காஜல் திருமணம் இன்னும் சில நடிக்கைகளை யோசிக்க வைத்திருக்கிறது. ராசி கண்ணாவுக்கும் திருமண எண்ணம் வந்துபோய்க்கொண்டிருக்கிறது.

இதுபற்றி அவர் கூறும்போது, நானும் திருமண நாளுக்காக காத்திருக்கிறேன். ஆனால் இப்போது வரை நான் சிங்கிள் தான். சரியான காதல் மற்றும் காதலனுக்கு காத்திருக்கிறேன். அவருடன் டேட்டிங் செய்ய வேண்டும், சந்தோஷமான காதல் தருணங்களை அனுப விக்க வேண்டும் என்ற எண்ண மெல்லாம் இருக்கிறது என் றார்.
ராசி கண்ணா தமிழில் அடங்க மறு, அயோகியா. இமைக்கா நொடிகள் படங்களில் நடித்தி ருக்கிறார். தற்போது மேதாவி, அரண்மனை ம்3, துக்ளக் தர்பார், சைத்தான் க பச்சா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் திருமணம் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா ஆகியோரையும் சிக்கலில் இழுத்துவிட்டிருக்கிறது. அவர் கள் குடும்பத்திலும் தமன்னா, அனுஷ்கா ஆகியோரை திரும ணம் செய்துகொள்ளும்படி கேட்டு வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை