பிரபல நடிகருக்கு மீண்டும் காயம்? காலில் பேண்டேஜுடன் சுற்றுகிறார்..

by Chandru, Nov 15, 2020, 10:38 AM IST

இயக்குனர் ராஜமவுலியின் மகத்தான ஆர் ஆர் ஆர் படக் குழு படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இயக்குனர் ராஜமவுலி மற்றும் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் என்.டி.ஆர் ஆகியோ ரை அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிறப்பு ஸ்டில்களை படக் குழு வெளியிட்டது. அவர்கள் மூவரும் வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்தனர். ஒரேவிதமான உடையில் அற்புதமாக இருந்த அவர்கள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தனர்.

மகிழ்ச்சியான புகைப்படமாக இருந்தபோதிலும் அதில் ஒரு கலக்கம் ரசிகர்களை ஆட்கொண்டது. ராம் சரண் காலில் ஒரு கட்டுடன் காணப்படுவது ரசிகர்களை கவலைய டையச் செய்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவருமே மாறி மாறி காயம் அடைந்தனர், இது தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை தாமதமாத தொடங்க வேண்டிய நிலைக் குள்ளாக்கியது.

ஜூனியர் என் டி ஆர் காயத்தி லிருந்து மீண்டு வந்தாலும், சரண் இன்னும் காலில் ஒரு பேண்டேஜ் அணிந்துள்ளார். இது ஒரு புதிதாக ஏற்பட்ட காயமா அல்லது ஏற்கனவே ஏற்பட்ட காயத்துக்கு மேலும் பதிப்பு எற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக பேண்டேஜா எனபது புலப்படவில் லை. இந்த செய்தி தொடர்பாக 'ஆர்.ஆர்.ஆர்' குழு தெளிவு படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

உண்மை கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கற்பனை படத்தில் கோமரம் பீம் வேடத்தில் என்.டி.ஆர் நடிக்க அல்லூரி சீதாராமராஜாக சரண் நடிக்கிறார். இரண்டு கதாபாத் திரங்களையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் அறிமுகப் படுத்தி எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்டும் இயக்குனர் கூடவே வம்பையும் விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார். ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் பீம் கதாபாத்திரம் முஸ்லிம் தொப்பு அணிந்து வருவதுபோல் இப்படத்தின் டீஸரில் காட்டப்பட்டது. அதற்கு ஆதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். தெலங்கானா பா ஜ தலைவரும் கண்டனம் தெரிவித்ததுடன் ராஜமவுலி யை தாக்குவோம் என்று எச்சரித்திருந்தார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை