பிடித்தமானவர் கிடைக்காவிட்டால் நோ கல்யாணம்.. பாப்புளர் நடிகை அதிரடி முடிவு..

by Chandru, Nov 15, 2020, 12:41 PM IST

காஜல் அகர்வால் திருமணம் முடிந்தாலும் முடிந்தது அடுத்த பல நடிகைகள் திருமண கேள்விக்குள் சிக்கிக்கொண்டு படாத பாடு படுகின்றனர். நயன்தாரா, தமன்னா. அனுஷ்கா, திரிஷா போன்ற வர்களிடம் எப்போது திருமண என்று கேட்டு வருகின்றனர். நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை கைகாட்டி எஸ்ஸாகி விடுகிறார். தமன்னா, எனக்கு மாப்பிள் ளை கிடைக்கவில்லை என்கிறார். அனுஷ்கா நடிகர் பிரபாஸின் காதல் கிசுகிசு விலிருந்து விடுபடவில்லை.

நடிகை திரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக சில வருடங்கலுக்கு முன் கிசுகிசு பரவியது. பின்னர் அவர்கள் பிரேக்அப் செய்ததை அடுத்து அந்த பேச்சு குறைந்தருந்தது. சமீபத்தில் ராணா மிஹீகாவை என்பவரை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகை திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சய தார்த்தம் நடந்தது. கடைசி நேரத்தில் திருமணத்துக்கு இஷ்டமில்லை என்று திரிஷா வெளியேறிவிட்டார். சமீபத்தில் சிம்புவும் திரிஷாவும் காதலிப்பதாக நெட்டில் தகவல் பரவியது. ஆனால் அது வெறும் கிசுகிசுவாக இருந்து வருகிறது. திரிஷாவுக்கு எப்போது திருமணம்? யாரை காதலிக்கிறீர்கள் என்பதற்கு பதில் அளித்திருக்கிறார்.

அவர் கூறும்போது,திருமணம் பற்றி முடிவு எற்கனவே நான் செய்து வைத்திருக்கிறேன். என்னை முழுமையாக நேசிக்கிற, எனக்கு பிடித்தமான ஒருவரைத்தான் மணப்பேன். அதற்காக காத்திருப்பேன். அது காதல் திருமணமாகவே இருக் கும். ஒருவேளை அப்படி யாரும் கிடைக்காவிட்டால் இப்படியே இருந்துவிடுவேன், நான் சிங்கிள் என்று சொல்வ தை எனக்கு ஒன்றும் கவலை கிடையாது. எனக்கு உதவும் மனப்பான்மை பள்ளி வயதிலி ருந்தே உண்டு. மற்றவர் களுக்கு உதவுவேன். செல்லப் பிராணிகள் மீது அன்பு அதிகம் 5 தெரு நாய்களை அன்பாக வளர்த்து வருகிறேன். குதிரை ஏற்றம் பழகிக்கொண்டிருக் கிறேன். நல்ல கதை அம்ச முள்ள படங்களில் நடித்தும் வருகிறேன் என்றார் திரிஷா.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை