இரும்புத்திரை இயக்குனருடன் இணையும் கடைக்குட்டி சிங்கம்..

by Chandru, Nov 15, 2020, 12:35 PM IST

விஷால் நடித்த இரும்புத் திரை, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன் இவர் அடுத்து இயக்கும் படத்தில் கடைக்குட்டி சிங்கம் நடிகர் கார்த்தி நடிக்கிறார்.

கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர், கார்த்தி. தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன் முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான 'இரும்புத் திரை', 'ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் மித்ரனுடன் கார்த்தி இணைந் திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் புரொடக்‌ஷன் 4 படைப்பாக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசைய மைக்க, பாடல் பதிவுடன் ஆரம்பமானது. ஒளிப்பதிவு ஜார்ஜ் சி வில்லியம்ஸ், எடிட்டிங் ரூபன். கலை கதிர், நிர்வாக தயாரிப்பு- கிருபாகரன் ராமசாமி. தயாரிப்பு மேற் பார்வைபிரசாத்.

பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங் கள் விரைவில் அறிவிக்கப்படும்.

கார்த்தி தற்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார். ஏற்கனவே கீத கோவிந்தம் போன்ற சில படங்களின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர் களுக்கு அறிமுகமாகி இருந்தா லும் முறைப்படி சுல்தான் படம் மூலம் தமிழில் அவர் அறிமுகமாகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை