கொரோனா இல்லாவிட்டாலும் 14 நாள் தனிமை கட்டாயம்.. நடிகருக்கு சுகாரதார துறை கண்டிப்பு..

by Chandru, Nov 16, 2020, 09:09 AM IST

நடிகர் சிரஞ்சீவி சில தினங்களுக்கு முன் ஆச்சார்யா தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்து புறப்பட்டார். படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன் அவருக்கு கோரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் கொரோனா உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சிகிச்சை மேற்கொண்டதுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அறிக்கை வெளியிட்ட அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் தனிமையில் இருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் என்னை சந்தித்தவர்களும் தங்களை கொரோனா டெஸ்ட்டுக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள் என்று கெடுக்கொண்டார். அவருடன் நடிகர் நாகார்ஜூனா முதல்வர் சந்திரசேகரராவை சந்திக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். இதையடுத்து நாகார்ஜூனா கொரோனா டெஸ்ட் செய்துக்கொண்டார். அவருக்கு நெகடிவ் என தெரியவந்தது. இதையடுத்து அவர் தான் நடத்தி வரும் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் வழக்கம்போல் கலந்து கொண்டார்.
சிரஞ்சீவி கொரோனா சிகிச்சை எடுத்துவந்தாலும் அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இதில் சந்தேகம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் 3 விதமான டெஸ்ட் எடுத்ததுடன் ஸ்கேன் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டார். ஆனால் எல்லாவற்றிலும் அவரது உடல்நிலை நார்மலாக இருப்பதாக முடிவு வந்தது. இதையடுத்து அவர் தனக்கு கொரோனா டெஸ்ட்டில் நெகடிவ் வந்திருக்கிறது. ஏற்கனவே பழுத்தான கருவியால் சோதித்ததில் கொரோனா இருப்பதாக தவறாக கூறப்பட்டது என அறிவித்ததுடன் தீபாவளி நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். பிறகு சீனியர் இயக்குனர் கே.விஸ்வநாத் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். விரைவில் ஆச்சார்யா படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள முடிவு செய்தார். இந்நிலையில் அவருக்கு அதிர்ச்சி தரும் உத்தரவு ஒன்றை சுகாதார துறை அமைப்பு தெரிவித்துள்ளது. ஐசிஎம் ஆர்ம் வழிகாட்டுதல் படி கொரோனா பாதிப்பு டெஸ்டில் பாசிடிவ் என வந்தவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

எனவே சிரஞ்சீவி அதனை பின்பற்றி 14 நாட்கள் தனிமையை கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. கொரோனா பாதித்த அமிதாப்பச்சன் முதல் நடிகர் விஷால் வரை 14 நாட்கள் தனிமையை கண்டிப்பாக கடைப்பிடித்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதில் அமிதாப்பச்சன் மாதக்கணக்கில் மருத்துவமனனையில் தங்கி தனிமையில் இருந்தபடி சிகிச்சை பெற்றார். விஷால் ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொண்டு குணம் அடைந்ததாக தெரிவித்தார். இயக்குனர் ராஜமவுலி, நடிகர் டாக்டர் ராஜசேகர், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், தமன்னா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமையை கடைப்பிடித்து சிகிச்சை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை