கையை கட்டி வாயை போத்தி குத்தவச்சி அமர்ந்த கீர்த்தி..

by Chandru, Nov 16, 2020, 09:11 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார். தெலுங்கிலும் அதேபோல் முன்னணி நடிகர்களுடன் வெகு சீக்கிரமே ஜோடி போட்டார். நடிகை சாவித்ரி வாழ்க்கை கதையாக உருவான நடிகர் திலகம் (தெலுங்கில் மகாநதி) சாவித்ரி வேடம் ஏற்று ஒஹோ புகழ் பெற்றதுடன் தேசிய விருதும் வென்றார். இந்நிலையில் அவருக்கு இந்தியில் நடிக்க அழைப்பு வர பாலிவுட் ஆசை அவரை ஆட்கொண்டது. தமிழ், தெலுங்கில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்த நிலையில் திடீரென்று இரண்டு மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டாமல் இந்திக்கு சென்றார். மும்பையில் வீடு எடுத்து தங்கினார். இந்தியில் ஜெயிக்க வேண்டுமென்றால் உடல் ஸ்லிம் தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று சிலர் கூறியதை ஏற்று தனது உடல் எடையை கடுமையாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியானார்.

அதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. இந்தியில் நடிக்க அழைத்த நிறுவனம் கீர்த்தி உடல் தோற்றம் மிகவும் மெலிந்திருப்பத்தால் அவர் எங்களது கதபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று சொல்லி கழற்றிவிட்டது. இதில் அதிர்ச்சி அடைந்து மீண்டும் தென்னிந்திய படங்களில் கவனம் திருப்பினார். பெண்குயின் என்ற படத்தில் நடித்தார். அப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. அதே போல் மிஸ் இந்தியா படத்தில் நடித்தார். அப்படமும் ஒடிடியில் வெளியானது இரண்டு படமும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. தற்போது மற்றொரு ஹிட்டுக்காக காத்திருக்கிறார். இயக்குனர் செல்வராகவன் சாணி காயிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். இப்பட்த்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றை கீர்த்தி சுரேஷ் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஒரு பக்கம் கையை கட்டி செல்வரகவன் குத்த வச்சி அமர்ந்திருக்க அவருக்கு அருகில் கீர்த்தி சுரேஷ் அதே போல் வாய்பொத்தி கையை கட்டிக்கொண்டு குத்தவச்சி அமர்ந்திருக்கிறார். இழந்த மவுசை திரும்பபெற இந்த படம் உதவியாக இருக்கும் என்று கீர்த்தி நம்பி இருக்கிறார். 1980களில் நடந்த ஒரு உண்மை கதையை பின்பற்றி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை