நடிகர்கள் சம்பளம் குறையுமா? குறையாதா? ஹீரோ ஆன காமெடி நடிகர் நச் பதில்..

by Chandru, Nov 16, 2020, 09:34 AM IST

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதங்களாக திரையுலகம் ஸ்தம்பிக்கும் நிலைக் குள்ளாகிவிட்டது. புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படவில்லை, தியேட்டர் திறப்பு இல்லை என மயான அமைதிக்கு திரையுலம் சென்றுவிட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. கொரோனா பாதிப்பால், தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். எனவே நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டனர். சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். ஆனால் பெரும்பாலான நடிகர்கள் அதுபற்றி வெளிப்படையாக கருத்து சொல்லாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். நகைச்சுவை நடிகர் சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். ஆர். கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை யொட்டி தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.

தமிழ்தாடு முழுவதும் சுமார் 650 தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. இப்படம் வெளியானது குறித்து சந்தானம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பிஸ்கோத் படம் வெளியாக நான் ரூ 50 லட்சம் தந்ததாக இயக்குனர், தயாரிப்பாளர் ஆர். கண்ணன் கூறினார். இதனால் சந்தானம் நிறைய பணம் வைத்திருக்கிறார் என்று எண்ணி விடாதீர்கள். இந்த படத்தை நான் பைனான்சியரிடம் கேட்டுத்தான் வாங்கித் தந்தேன்.பிஸ்கோத் படத்தை தியேட்டரில் வெளீடுவதா? ஒடிடியில் வெளியிடுவதா என்று குழப்பமான நிலை இருந்துவந்தது. தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற தகவல் வந்தததால் காத்திருந்து தியேட்டரில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஒரு படம் எடுக்கும் போதே அப்படத்தை தியேட்டரில் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்று ஆலோசித்து தான் உருவாக்கப்படுகிறது. சினிமா வெறும் வியாபாரம் மட்டுமல்ல ரசிகர்கள் நடிகர்களை கொண்டாடுகிறார்கள். அதுவொரு மகிழ்ச்சியான விஷயம்.

அதையாரும் இழக்க விரும்பமாட்டர்கள். டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறேன். அப்பட இயக்குனர் என்னிடம் அழுதே விட்டார். படத்தை ஒடிடியில் வெளியிடுவதாக பேசுகிறார்கள் என்று வருத்தப்பட்டார். அதற்கு காரணம் அவர் திரையுலகில் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார். அதில் உள்ள பஞ்ச் உள்ளிட்ட வசனங்களை மக்கள் ரசிப்பதை பார்க்க முடியாமல் போவிடுமோ என்ற ஆதங்கம்தான் அவரது அழுகைக்கு காரணம். ஒடிடியில் விற்றால் பணம் வரும் ஆனால் சினிமா வியாபாரம் மட்டும் கிடையாது, அதையும் தாண்டி அது மக்களோடு ஒன்றாக கலந்திருக்கிறது. நடிகர் சம்பளம் குறைப்பது பற்றி கேட்கிறார்கள். அது மார்க்கெட் நிலவரத்தை பொருத்து இருக்கும். பிஸ்கோத் படத்தை தியேட்டரில் கொரோனா காலத்தில் பயந்துக்கொண்டுதான் ரிலீஸ் செய்தோம் ஆனால் தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

முதல் நாளில் ரிஸ்க் எடுத்து எல்லா ஊரிலும் எனது ரசிகர்கள் சென்று பார்த்தார்கள் இப்போது பெண்கள் குடும்பமாக வரத் தொடங்கி இருக்கிறார்கள். தியேட்டர்க்கு வரும்போது அரசு வழிகாட்டுதல்படி முக கவசம் மற்றும் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது மிக அவசியம். அது நம் பாதுகாப்புக்கானது. எதிர்பார்த்த வசூல் இருக்கும் பட்சத்தில் நடிகர்கள் சம்பளம் குறைக்க வேண்டியது இருக்காது. அப்படி இல்லா விட்டால் குறைப்பார்கள். இது மார்க் கெட் நிலவரத்தை பொருத்தது. தியேட்டரில் 50 சதவீத டிக்கெட் ஒதுக்குகிறார்கள், இதை இன்னும் கூட அதிகரிக்கலாம். எல்லா நடிகர்களும் இதுகுறித்தும் சினிமா வலர்ச்சி குறித்தும் அரசிடம் சென்று பேசும் சூழல் உருவாகும். இவ்வாறு சந்தானம் கூறினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை