சினிமா குழுவை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்களால் பரபரப்பு..

Advertisement

கொரோனா காலமான இக்காலகட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் காகித பூக்கள் படக் குழுவினர் தயாராக இருந்தனர். ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் இப்படக்குழுவினர் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்திற்குச் ஷூட்டிங்கிற்கு சென்றனர். ஆனால் அந்த கிராம மக்கள் படக்குழுவினரை ஊருக்குள் வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்து வர விடாமல் தடுத்து விட்டனர். எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மொத்த யூனிட்டையும் பொள்ளாச்சியில் தங்க வைத்துவிட்டு இயக்குனரும் தயாரிப்பாளருமான முத்து மாணிக்கமும், தயாரிப்பு நிர்வாகியான சுப்ரமணியமும் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று மொத்த யூனிட்டையும் அங்கு வர வழைத்து ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்தனர். முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்ட "காகித பூக்கள் " திரைப்படம் விரைவில் பெரிய திரையில் வர உள்ளது.

மேலும் படம் பற்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகும் முத்துமாணிக்கம் கூறியவதாவது: ஒருவனின் காதலி இன்னொருவனின் மனைவியாகலாம். அதே சமயம் ஒருவனின் மனைவி இன்னொருவனின் காதலியாக முடியாது. அப்படி ஆனால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மாறுபட்ட கிளைமாஸுடன் சொல்லும் படம் தான் "காகித பூக்கள் " இதில் புதுமுகங்கள் லோகன் - பிரியதர்ஷினி இருவருடன் ப்ரவீண் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தில்லை மணி, தவசி, பாலு, ரேகா சுரேஷ் இன்னும் பலர் நடிக்கின்றனர். இத்தோஷ் நந்தா இசையமைக்கிறார். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார். பாலசுப்ரமணியம் கலை, ஸ்ரீ சிவசங்கர் - ஸ்ரீ செல்வி நடன பயிற்சி அளிக்கின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>