தனுஷ் - சாய்பல்லவி பாடல் ஒன் பில்லியன் புதியசாதனை..

by Chandru, Nov 16, 2020, 16:53 PM IST

தனுஷ் நடித்த மாரி படத்தை பாலாஜி மோகன் இயக்கினார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தனுஷுக்கு குறிப்பிடும்படியான படமாக இருந்தது. சில வருட இடைவெளிக்கு பிறகு மாரி2 படத்தை பாலாஜி மோகன் இயக்கினார். இதில் தனுஷ் ஹுரோவாக நடிக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். இப்படம் கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் தனுஷ் பாடிய ரவுடி பேபி பாடல் ஸ்பெஷல் ஹைலைட்டாக அமைந்திருந்தது. பட ரிலீஸுக்கு முன்பே இப்பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. பாடல் சூப்பர் ஹிட்டானது, ஒரு மில்லியன் இரண்டு மில்லியன் எல்லாம் கடந்து 90 மில்லியன் தாண்டி தற்போது 1 பில்லியன் வியூஸ் தொட்டிருக்கிறது. இது முதல் தென்னிந்திய திரைப்பட பாடல்களில் சாதனையாகும். இதனை ரசிகர்களும் படக்குழுவும் கொண்டாடி வருகிறது.

இதுகுறித்த தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி பகிர்ந்துக்கொண்டிருக்கும் தனுஷ், கொலை வெறி பாடலின் 9வது ஆண்டின் இதே நாளில் ரவுடி பேபி ஒன் பில்லியன் வியூஸ் எட்டியுள்ளது மிகப் பெரிய பொருத்தமாக அமைந்துள்ளது. தென்னிந்திய பாடல் ஒன்று ஒன் பில்லியன் எட்டியிருப்பது இதுவே முதல் முறை என தெரிவித்திருக்கிறார். தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் ஜெகமே தந்திரம் படம் அடுத்து தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் டைரக்டு செய்திருக்கிறார். இதிலிருந்து வெளியான ரகிட ரகிட பாடல் யூடியூபில் மற்றொரு சாதனைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இது தவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். இது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கதையாக உருவாகிறது. மேலும் அட்ராங்கிரே இந்தி படத்திலும் நடிக்கிறார். அடுத்து நீண்ட இடைவெளிக்கு மற்றொரு புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்குபிறகு தனுஷுடன் அனிருத் இணைய உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை