தளபதி புதிய படத்தை இயக்கப்போவது இவரா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..

by Chandru, Nov 17, 2020, 13:21 PM IST

தளபதி நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போடப்பட்டது. 7 மாதமாக படம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறது. கொரோனா தளர்வில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதும் முழுமையான கொள்ளளவு தியேட்டரில் டிக்கெட் அனுமதிக்கப்படவில்லை. 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் 'மாஸ்டர்' டீஸர் தீபாவளி தினத்தன்று வெளியிடப்பட்டது. அது 10 மில்லியன் வியூஸ் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படம் பற்றி குழப்ப நிலை நீடிக்கிறது. ஏஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக முதலில் தகவல் வெளியானது பின்னர் அது உறுதி செய்யப்படாமல் அமுங்கிப்போனது. இந்நிலையில் மகிழ்ச்திருமேனி படத் தில் விஜய் நடிக்கவிருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது. அதுவும் உறுதியாகவில்லை.

மகிழ்திருமேனி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதியபடத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா, விஜய் படத்தை இயக்க விருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க விருக்கும் 'தளபதி 65' படத்திற்காக விஜய்க்கு ஒரு கதையை எஸ்.ஜே.சூர்யா விவரித்துள்ளார் என சமீபத்திய சலசலப்பாக உள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் வெளிநடப்பு செய்த பின்னர் விஜய் இன்னும் இயக்குனரை உறுதி செய்யாமலிருக்கிறார். இப்போது, ​​எஸ்.ஜே.சூர்யா தனது ஸ்கிரிப்ட்டை விவரிக்க விஜய்யை சந்தித்துள்ளார். ஆனால் விஜய் தனது அடுத்த படத்திற்காக இயக்குனரை இன்னும் தேர்வு செய்யவில்லை. ஏற்கனவே 'குஷி' படத்தில் விஜயை இயக்கி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இதில் ஜோதிகா ஹீரோயினாக நடித்திருந்தார். காதல் கதையான குஷி ரசிகர்களால் நன்றாக ரசிக்கப்பட்டது. பின்னர், அட்லீ இயக்கிய 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்தார்.

விஜய் மற்றும் சூர்யா எப்போதும் ஒரு நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்கள் மீண்டும் கைகோர்த்தால் அது இன்னும் ஒரு பிளாக் பஸ்டராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 'டாக்டர்' பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜய்க்கு ஒரு கதையை சொன்னதாக கூறப்பட்டது. மேலும் பல பிரபல இயக்குநர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். விஜய் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்திற்குப் பிறகு தொடங்குவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டு விழாவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இசை அமைப்பாளர் தமன் விஜய் படத்திற்கு இசை அமைப்பதை முன்பு உறுதிப்படுத்தி இருந்தார். அந்த இயக்குனர் தற்போது வெளியேறி இருந்தாலும் விஜய் அடுத்த படத்துக்கு தமன் இசை அமைப்பார் என்றே கருத்தப்படுகிறது. முதல் முறையாக விஜய்க்கு இசை அமைக்க உள்ளதால் அவ்வப்போது பரவசத்தை வெளிப்படுத்தி வருகிறார் தமன்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை