பிபிஇ கிட் உடை அணிந்து ஊருக்கு புறப்பட நடிகை தயார்..

by Chandru, Nov 18, 2020, 10:46 AM IST

கொரோனா ஊரடங்கின் போது வீட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஹாசன் கடந்த 7 மாதமாகவே வீடே வாசம் என்றிருந்தார். வீட்டுக்குள்ளேயே தனது பணிகளை முடக்கிக்கொண்டார். உடற்பயிற்சி செய்வது, இசை பயிற்சி செய்வது, செல்ல பூனையுடன் விளையாடுவது என பொழுதைக் கழித்து வந்தார். ஏற்கனவே ஒன்றரை வருடம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர் லாக்டவுனுக்கு முன்புதான் ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்கத் தொடங்கினார். அதற்குள் லாக்டவுன் வந்து அவரை முடக்கி போட்டுவிட்டது.

வாழ்க்கையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக ஊடகங்களில் பங்கெடுப்பதில் மட்டும் ஸ்ருதி தவறுவதில்லை. லாக்டவுனில் தான் சில ஆங்கில பாடல்கள் எழுதி அதற்கு மெட்டமைத்தார் தனது தினசரி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தனது ரசிகர்களிடம் பகிர்ந்துவந்தார். தற்போது லாக்டவுன் காலத்திலிருந்து வெளியில் வரத் தயாராகி விட்டார் ஸ்ருதி. அடுத்த படப்பிடிப்பு திட்டங்கள் வகுத்திருக்கிறார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் கிராக், பவன் கல்யாணின் வக்கீல் சாப் படங்களில் நடிக்கிறார்.தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், ஸ்ருதிஹாசன் 'பயணத்திற்குத் தயாராக' இருப்பதால் பிபிஇ கிட் அணிந்திருக்கிறார். தொற்று நோய்க்குப் பிறகு, பயணத்திற்கான விதிகள் மற்றும் விதி முறைகள் மாறிவிட்டன, ஸ்ருதி அவற்றைக் கண்டிப்பாக பின்பற்றுகிறார். படத்தில், அவர் தனது கருப்பு பிபிஇ கிட்டைக் குறிப்பிட்டு, "டிராவல் ரெடி # DOESITCOMEINBLACK" என்று எழுதினார்.

ஸ்ருதிஹாசன் கடைசியாகத் தமிழில் கடந்த 2017 ஆண்டில் சிங்கம்3 படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். லண்டன் பாய் பிரண்ட்டுடன் டேட்டிங்கில் ஈடுபட்டார். சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக அவருடன் பழகிவந்தார். இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென்று அவருடன் பிரேக் அப் செய்துகொண்டார். காதல் பிரிவால் சில காலம் வாடினார். பின்னர் அதிலிருந்து முற்றிலுமாக வெளியில் வந்து நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்தார். ஸ்ருதிஹாசன் ரீ என்ட்ரி அவருக்கு புதிய உயர்வைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை